பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேலைக்காரி 107 மூர்த்தி: ஆனந்த்! நீயா என்னைத் தூக்கு மேடையி லிருந்து காப்பாற்றினாய்? நீயா வடநாட்டு வக்கீல்! உனக்கா ...என்மீது இரக்கம் பிறந்தது? ஆனந்: படித்த முட்டாளே, கேள். இலங்கைத் தோட் த்திலே, இரவு-பகலாக வேலை செய்து, 200 ரூபாய் சேர்த்து, அதைத் தன் வயோதிகத் தந்தைக்குத் தந்து, அவர் மகிழ்வதைக் கண்டு மகிழ வேண்டும் என்று எண் ணியே ஈரம், பச்சாதாபம், அன்பு ததும்பிக் கொண்டி ருத்த மனந்தாண்டா இது. பாடுபட்ட கைகளடா. காடு மேடு சுற்றிய கால்கள், உழைத்து உழைத்து, உருக்குலைந் தவன் நான். உன்னைப்போல் உல்லாசபுரியில் உலவியவ னல்ல. படித்துப் பட்டம் பெற்று, வேலை கிடைக்காத தினால் சிலோன் காட்டிலே கணக்கெழுதப் போன ஆனந்தன் நான். என்னை மேவார் விவாச மைனா என்று எண்ணிக் கொண்டு சரசாவை எனக்குக் கல்யாணம் செய்து தந்தார் சீமான் வேதாசலம். செய்து உன் சகோதரி சரசாவை ஏன் கல்யாணம் கொண்டேன்? உன்னைப் போல் காதலுக்காகவா? இல்லை. சீமானின் பணத்திற்காகவா? கடுகளவும் இல்லை. சரசாவை நான் கல்யாணம் செய்து கொண்டது என் வேதனையை வெளிப்படுத்துவதற்கு? உன் தகப்பனார் பணத்தாசை பிடித்து பல ஏழைகளைக் கசக்கிப் பிழிந்தார். அப்படி அவதிப்பட்டவர்களிலே என் தந்தையும் ஒருவர். பக்கத்து ஊர்! சுந்தரம் பிள்ளை என்று பெயர். பட்ட கடனுக்காக வீடும் தோட்டமும் உன் தகப்பனாருக்குக் கொடுத்தார்; பராரியானார். வீடு இழந்த என் தந்தையை ஜெயிலிலே தள்ள இந்தத் தயாள மூர்த்தி ஏற்பாடு செய் தார். பாவம்! ஏழை என்ன செய்ய முடியும்? மரக்கிளை யிலே பிணமாகத் தொங்கினார். என் தந்தை பிணமானார். என் தந்தையைக் கொன்ற பாதகனை நான் கொடுமைப் படுத்தியது குற்றமா?