பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

வேலைக்காரி

சரசா, நீ சொல்! உன் தந்தையை நான் கொடுமைப் படுத்தியது குற்றமா?

மூர்த்தி, நீ பேசு! உன் தந்தையைக் கொடுமைப் படுத் தியது குற்றமா?

பாலு முதலியாரே! நியாயம் தெரியுமே, உமக்கு! நீர் சொல்லும், வேதாசல முதலியாரை நான் கொடுமைப் படுத்தியது குற்றமா?

வேதாசல முதலியாரே! இப்போது என்னைப் பார்க்க கூசுகிறதோ! நீரே சொல்லும், உம்மை நான் கொடுமைப் படுத்தியது குற்றமா?

வே: ஐயோ...என்னால் இதைத் தாங்கமுடியவில் ஆனந்: இப்படி நான் எத்தனை ஆயிரம் தடவைகள் சொன்னேன் தெரியுமா,மரக்கிளையிலே பிணம் தொங்கும் போது. அப்போதே உம்மைக் கொன்று இரத்தத்தைக் குடித் திருப்பேன்.

மணி: நான்தான் அதைத் தடுத்தேன்...நானதான்...

பாலு. அப்பா, மணி! நல்ல சமயத்திலே நீ நல்ல புத்தி தான் சொல்லியிருக்கிறே...

மணி: பாருங்க... பாம்பு கடிச்சா பட்டுண்ணு உயிர் போயிடும். அதனால் ஒரு பயனும் இல்லை. தினமும் படுக் கையிலே போய் படுக்கணும்; பாம்பு வரணும்;கடிக்கணும்; உயிர் துடிக்கணும்.. ஆனால் பிராணன் மட்டும் போகக் கூடாது. அதைப்போலே, உன் தகப்பனைக் கொன்ற சண் டாளனை வாட்டி வாட்டி,வதச்சி வதச்சி சித்ரவதை செய் யணும்னு நான்தான் யோசனை சொல்லிக் கொடுத்தேன்

.

ஆனந்: ஆம்; அந்த யோசனைப்படிதான் மருமகனான உடனே, அட்டகாசத்தை ஆரம்பித்தேன் ... குடித்தவனைப் போல் நடித்தேன். சரசாவை அடித்தேன்; வேதாசல முதலி