பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேலைக்காரி

109

யாரை வாட்டினேன்; வேதனையால் அவர் கஷ்டப்படும் போது என் கண் குளிரப் பார்த்தேன். அதுமட்டுமா? மூர்த் திக்கும் இவருக்கும் சண்டை மூட்டினேன். சீமான் வீட்டுப் பெண்ணை இவர்கள் கண்ணெதிரிலேயே காய்கறி விற்கச் செய்தேன். இவ்வளவும் ஏன் செய்தேன்? பணத்திமிரை ஒடுக்க, செல்வம் இருந்தாலும சுகம் பெறாமல் தடுக்க, கேட்டுப் பாருங்கள் அவரை! செல்வம் இருந்து அவர் கண்ட தென்ன? வேதனை! வேதனை!! வேதனை!!! ஏன், ஆச்சரி யப்படுகிறீர்கள்? என் மனம் சாந்தி அடைய வஞ்சம் தீர்த் துக் கொள்ள எண்ணினேன். வெற்றி பெற்றேன்.

வே: ஆனந்தா! போதும். போதும்; எனக்கு இந்தத் தண்டனை. என்னை மன்னித்துவிடு. என்னால் உன்னைப் போல் எத்தனை பேர் கஷ்டப்பட்டார்களோ? எனக்குத் தெரியாது. பாழும் பணத்தாசையால், பணத்திமிரினால் நான் பல ஏழைகளைக் கொடுமைப்படுத்தி வந்தேன். உண்மைதான்! ஆனால் உன்னை இதுவரை பெரிய துஷ் டன் என்றே எண்ணி இருந்தேன் உண்மை இப்போதுதான் தெரிகிறது, நீ எவ்வளவு நல்ல பிள்ளை என்று

மணி: என்னங்க போங்க, முதலியார்வாள்! இப்ப வெல்லாம் எவ்வளவோ நல்லத்தான பேசுறீங்க. முன்னெல் லாம் என்ன முறுக்கு! ஏழைகளைக் கண்டால் என்ன கடு கடுப்பு! பச்சென்று யாராவது வாழ்ந்தால், அடா..டா, வட்டிப் பணத்தைக் கணக்கு தீர்த்து வாங்குவதிலே என்ன கண்டிப்பையா... இப்படி ஊரை ஏமாற்றி, பணத்தை மிச்சப் படுத்தி என்னய்யா சுகத்தைக் கண்டீர்? தங்கத்தினாலே அரிசி செய்து சமைத்து, கோமேதகக் கூட்டும், வைர வருவ லும், முத்துப் பச்சடியும், மோர்க்குழம்புலே கெம்புமா கலந்து சாப்பிட்டு வந்தீர்?

உண்மைதான். பணத்தாசையால் பல கொடுமைகள் புரிந்த வேதாசலம் மாண்டே போனான். தான் புத்தி வந்த புது வேதாசலம். தவறை உணர்ந்து கொண்டவன்.