பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

வேலைக்காரி

ஆனந்: வேதாசவ முதலியாரே! மற்றொன்றும் நீர் உணர வேண்டும். பணத்திமிர் மட்டுமல்ல உமக்கு! ஜாதித் திமிரும் அமோகம். ஆனால் நடந்ததென்ன? பஞ்சை சுந் தரம் பிள்ளையின் மகன் ஆனந்தன், வேதாசல முதலியா ருக்கு மருமகன். அதுமட்டுமா? இதோ, வீற்றிருக்கும் மண மகள் பேங்கர் பர்மா பாலு முதலியாரின் மகள் என்பது உமது அல்லவா? இதோ பாருங்கள், அவரது பெற் றோரை! (திரையைத் தள்ளிக் காண்பிக்கிறான்.)

மூர்த்தி. என அமிர்தமா சுகிர்தம்?

பாலு: ஒன்று சொல்ல மறந்துட்டேன். அமிர்தம்தான் சுகிர்தம்; என் வளர்ப்புப் பொண்ணு.

ஆனந்: ஆம்; உமது மருமகள் யார்? வேலைக்காரி அமிர்தம். வேற்று ஜாதிப்பெண். எங்கே உன் ஜாதித் திமிா பணம் பத்து நாளில் ஜாதியைப் பட்சணமாக்கிவிட்டது. பார்த்தீரா? பணத்திமிர் ஒழிந்தது; ஜாதித் திமிரும் ஒழிந் தது; என் வேலையும் முடிந்தது; நான் வருகிறேன்...

சர: நில்லுங்கள்! நீங்கள் இல்லாத இந்த வீட்டில் எனக்கு என்ன வேலை? நானும் தங்களுடன் வரவேண்டியது தான்

.

மூர்த்தி: ஆம்! ஆனந்தன் இல்லாத இடத்தில் இனி யாருக்கும் இடமில்லை. அவர் போகும் உலகம்தான் எனக் கும்.

அமிர்: நீங்கள் போய்விட்டால் எனக்கு மட்டும் இந்த வீட்டில் என்ன வேலை? நானும் உங்களுடன் வரவேண்டி யவள்தான்...

வே: நில்லுங்கள்! யாரும் எங்கேயும் போகவேண்டாம். இனி, உங்களுக்கு வேறு உலகம்; எனக்கு வேறு உலகமில்லை; ஆனந்தா, வா! சரசா! இந்தப் பாதகனை நல்லவழிப்படுத் திய உன் புருஷன் ஆனந்தனோடு ஆனந்தமாக வாழ்ந்திடு; அமிர்தம், பலே! நீ பெரிய வேலைக்காரிதான்! காதலால்