பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேலைக்காரி வே: பேச்சுக்கு குறைச்சலில்லடா உன் கிட்டே. 13 பணம் கொடுத்துப் பத்து மாசம் ஆகுதே, அந்த சுந்தரம் பிள்ளை தரவேண்டிய பாக்கி என்னாச்சு? சொ: பணம் வர வழியைக் காணுமுங்க. அதனாலே அரஸ்ட்டுக்கு ஏற்பாடு பண்ணிவிட்டேனுங்க.... போய் வே: அதைப் பற்றி அவனுக்கென்னடா! அங்கே சொஸ்தமா உட்கார்ந்து தின்பான் ..சாப்பாட்டுக்குப் படி நானில்லடா கட்டணும்... சொ: அப்படி இல்லீங்க...அவன் ரொம்பவும் மானஸ்தன். அரஸ்டு என்று சொன்னா... வே: சரி, போதும்டா. அதற்கு வேண்டிய ஏற்பாடெல் லாம் செய். ஓட்டத்தில் ஓடு ... முதல்லே அதைக் கவனி வே: (தனக்குள்) திருட்டுப் பசங்க. நம்ம பணத்தையும் வாங்கிட்டு பிராணனையும் வாங்கறானுங்க. டேய், சொக்கா! இருடா, நானும் வாரேன். இந்தப் பயலைப் பிடித்து ஜெயில்லே தள்ளினாத்தான் மற்ற கடன்காரப் பயல்களுக்குப் புத்தி வரும். காட்சி-4. இடம்: சுந்தரம் பிள்ளையின் வீடு. இருப்: சுந்தரம் பிள்ளை, வேதாசல முதலியார், சொக்கன். சுந்த வேண்டாமுங்க. ஜெயிலிலே மட்டும் தள்ளாதீங்க. எவ்வளவோ வேதனையை அனுபவிச்சியிருக்கிறேன். இழிவான பெயர் மட்டும் ஏற்பட்டதில்லீங்க. ஜெயி லுக்குப் போனா.. ஆயுள் பூராவும் பழிப்பாங்க, ஐயா! ஏழை மீது கொஞ்சம் இரக்கம் காட்டுங்க.. வே: டேய், சொக்கா! இழுத்துப் பூட்டுடா கதவை! இந்த நாயை தெரு வழியாக இழுத்துக்கொண்டு போகச் சொல்லு ஜெயிலுக்கு.