பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

14 வேலைக்காரி சுந்த: ஐயா! வேண்டாமுங்க. இதை என்னாலே தாங்க முடியாதுங்க; நினைத்தாலே மனம் பதறுதுங்க. வே: பதறுதாடா உன் மனசு! உன்னைப்போல திருட்டுப் பசங்க என் பணத்தை எடுத்து மோசம் செய்யும்போது மட்டும் என மனசு குளிருதோ? போடா. போக் கத்தவனே!.. வாங்கின கடனைக் கொடுக்க வழி யில்லையினா, குளத்திலே--குட்டையிலே விழுந்து சாகிறதுதானே! சுந்த: ஐயா! கொஞ்சம் பொறுங்க. உங்க கடனை இன்னும் கொஞ்சநேரத்தில் பைசல் செய்துவிடுகிறேன். காட்சி-5. (சுந்தரம் பிள்ளை உள்ளே போய் மரக்கிளை யில் பிணமாகத் தொங்குகிறார்.) இடம்: காளி கோயிலின் பாதை. இருப்: சுந்தரம் பிள்ளையின் மகன் ஆனந்தன். ஆனந்தனின் நண்பன் மணி.) (சுந்தரம் பிள்ளை மகன் ஆனந்தன், அய லூரிலிருந்து வருகிறான்; வழியில் பழைய நண்பன் மணியைச் சந்திக்கிறான்.] அடே, நீ சுந்தரம் பிள்ளை மகன் மணி: இடியட்! யாரப்பா நீ? கண்ணு தெரியலை? ஆனந்தனில்லே? மணி: நான்தாம்பா மணி.. ஆனந்: அடடா, மணி! சௌக்கியமா? மணி: ஆனந் சௌக்கியமாய் இருக்கிறேன். மணி! என்னை யாருமே அடையாளம் கண்டு கொள்ள முடியாதென்றில்லே நினைச்சேன்!