பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேலைக்காரி 15 மணி: ஆமாப்பா! நான்கூ... முதல்லே உன்னைப் பார்த்த தும் எவனோ ஒருத்தன் சாமிக்குப் பிரார்த்தனை பண்ணப் போகிறவன்போல இருக்கு என்று நினைத் தேன் ... பார்த்தால் நீ! ஆனத்: ஆமாம், எங் மணி! ஒரு வகையில் பிரார்த்தனை செலுத்துபவன் போலத்தான் வந்திருக்கிறேன். பார்த்து... மணி! எங்கப்பா... கப்பாவைப் சௌக்கியமா இருக்கிறாரா? மணி: சௌக்கியமா... இருக்கிறார். வா, போகலாம். ஆமாம்.. எவ்வளவு பணம் கொண்டு வந்திருக்கிறே? ஆனந்: மணி! 200 ரூபாய் கொண்டு வந்திருக்கிறேன். 200 ரூபாய் மணி: அடப்பாவி! அயலூருக்குப் போய் தான் கொண்டு வந்தாயா? ஆனந்: உனக்குக் கேலியாக இருக்கு மணி. தேயிலைத் தோட்டத்திலே. இரவும் பகலும் கஷ்டப்பட்டு, ஒரு வேளை சாப்பிட்டு, மீத்தின பணமப்பா இது. இதைக் கொண்டு அப்பாவுக்கு ஒரு கடை கண்ணி வைத்துக் கொடுக்கவேண்டுமென்று ஆசையோடு வந்தேன். மணி! உனக்குத் தெரியுமே, அப்பாவுக்குத் தள்ளாத வயசு! அவர் எனக்காக எவ்வளவு கஷ்டப்பட்டவர். மணி: எப்படியாவது வந்து சேர்ந்தாயே, அதுவே போதும் உங்கப்பாவுக்கு உன்னைப் பார்த்தாலே போதும்; இந்த 200 ரூபாயும் இரண்டு வட்சம் என்று எண்ணிச் சந்தோஷப்படுவார். ஆனந்: தடையென்ன மணி? தெருக்கோடியிலே எங்கப்பா என்னைப் பார்த்ததும்.. வாடா ஆனந்தா என்பார். அழைப்பதைக் கேட்டதும் நான் இந்தப் பத்து வருஷ காலம் கஷ்டப்பட்டதெல்லாம் பஞ்சாப் பறந்துவிடும். மணி! சரி, போகலாமா? மணி : போகலாம்.. ஆனந்: (வரும் வழியில்} உனக்கென்னப்பா வேலை?