பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

16 மணி: எங்கேயாவது வேலை வேலைக்காரி கிடைக்கிறதா, இல்லையா என்று சுற்றிப் பார்ப்பதுதான் என் வேலை. ஆனந் எங்கோயோ படிக்கணுமென்று சொன்னியே? மணி:ஓ, படிச்சாச்சே! படிச்சி டிகிரியும் வாங்கியாச்சே! ஆனந்: எந்த காலேஜில்? மணி: நான் படித்தது... இந்தப் பரந்த உலகத்திலே வாங்கின டிகிரி, போலீஸில் கேடி. ஆனந்: ரொம்ப நல்லவனாச்சே நீ! மணி: நல்லவன்தான். யார் இல்லையென்று சொன் னாங்க? நல்லவனுக்குத்தான் இந்தப் பொல்லாத உலகில் நாணயமாக பிழைக்க வழியில்லையே, வா! (வழியில் காளி கோவிலைக் கண்டு வணங்கு கிறான்.] ஆனந்: காளி, மகமாயி, மகேஸ்வரி! இத்தனை வருஷத் துக்குப் பிறகு அப்பாவைப் பார்க்க முடிஞ்சுதே, அது உன் கிருபை.. பக்கத்தில் இருந்த ஒருவர்: மகா சக்தி வாய்ந்தவளப்பா, இந்த மாகாளி! இந்த மாகாளியை மனதிலே பக்தி யோடு பூஜை செய்து, நம்பிக்கையாக கும்பிட்டு வந் தால் இந்த உலகத்தில் நடக்காதது ஒண்ணுமில்லே... மற்றவர் அவள் கண்கண்ட தெய்வமாச்சேயப்பா! எந்தக் காரியமா இருந்தாலும் சரி, கைமேல் பலன் கிடைக்கும். மணி. (ஆனந்தனைப் பார்த்து) இந்தாப்பா! அப்பா வைப் பார்க்க வேண்டுமென்று பறந்தாய்; இந்தப் பைத்தியக்காரன் பேச்சைக் கேட்டு அப்படியே நின்றுவிட்டாயே! வாப்பா, போகலாம். (இருவரும் போகிறார்கள்)