பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேலைக்காரி காட்சி-6. 17 இடம்: சுந்தரம் பிள்ளையின் வீடு. இருப்: சொக்கன், அமீனா, வேதாசலம். சொ: எங்கே, உள்ளே போன ஆளைக் காணோம்! என்ன செய்துகொண்டிருக்கிறான்? அமீனா. சொ: ஓய், சுந்தரம் பிள்ளை!...கந்தரம் பிள்ளை! எங்கே காணோம்? ஹா... எஜமான்... போய்த்தான் பார்ப்போம். (தூக்கு போட்டுக் கிடப்பதைப் பார்க்கிறார் வேதாசலம்.] வே: அடப் பாவி! காட்சி-7. ஆனந்: [எல்லோரும் போய்விடுகிறார்கள்.] இடம்: சுந்தரம் பிள்ளையின் வீடு. இருப் மணி, ஆனந்தன். [மணியும் ஆனந்தனும் வருகிறார்கள். தந்தை மரக்கிளையில் பிணமாகத் தொங்குவதைக் காண்கிறான் ஆனந்தன்). அப்பா. அய்யோ அப்பா! அப்பா..அய்யோ, மணி! என் கதியைப் பார்த்தாயா? அப்பா! வாயைத் திறந்து ஒரு வார்த்தை போமாட்டியா அப்பா! ஒருதரம். 'ஆனந்தா வாடா! மகனே வாடா' என்று அழைக்கமாட்டியா? அப்பா, நீ ஏன் தூக்கு போட்டுச் சாக வேண்டும்? நான் எதுக்கும் உதவாதவன், அவன் முகத்திலே முழிக்கக் கூடா தென்று நினைத்தாயா? அப்பா! நாலு வீடு பிச்சை எடுத்தாகிலும் உன்னைக் காப்பாற்றமாட்டேனா!