பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

18 வேலைக்காரி கடவுளே: சண்டாளத் தெய்வமே! உனக்குக் கண் ணில்லையா? எனக்கிருந்த ஒரே ஆஸ்தி, ஒரே துணை, ஆதாரம் அவரை இக்கதிக்கு ஆளாக்கி விட்டாயே... (சுந்தரம் பிள்ளை மடியிலிருந்த லெட்டரை எடுத்துப் படித்துப் பார்த்துவிட்டு ஆனந்த னிடம் கொடுக்கிறான் மணி. அதை. வாங்கிப் பார்க்கிறான் ஆனந்தன்.) ஆனந்: யாரைய்யா இங்கு வேதாசவ முதலியார்? மணி: அவர்தான் இப்பொழுது இந்த ஊருக்கே முதலாளி. பக்கத்தில் இருந்தவர்: அவரா ..ரொம்ப நல்லவராச் சுங்களே...! ஆனந்: அவனா நல்லவன்? என் குடும்பத்தைக் கெடுத் தவன். என் தந்தையைச் சாகடித்தவன். அவனா நல்லவன்: அய்யா! இவர் ஏன் பிணமானார் தெரி யுமா? வேதாசலத்தினுடைய பணத்தாசையினால் தான். கடன் கொடுத்தாராம்; கஷ்டப்படுத்தி னாராம்; வீடு -- வாசல்களை ஏலத்தில் எடுத்தா ராம்; பத்தாக் குறைக்கு, வாங்கிய கடனுக்காக ஏசி னாராம்: மானத்துக்குப் பயந்து மரக்கிளையில் பிண LO'TGTTT. அடப் பாவி! ஒரு வயோதிகன் பிணம் வழியில் கிடந்தாலும் சரி, உன் பெட்டியில் பணம் குலிந்தால் போதுமென்றுதானே இருந்தாய்! அட, பாதகர! இந்தப் பாவம் உன்னைச் சும்மா விடுமா? நீ நல்லாயிருப்பியா? உன் குடும்பம் நல்லாயிருக் குமா? உன் பிள்ளை குட்டிகள் நல்லா இருப்பார் களா?.. காட்சி--8. இடம்: மாதர் சங்கம். இருப்: சரசா, மற்றும் பெண்கள். [மாதர் சங்கம். சரசாதேவி நடனம் நடக் கிறது. நடனம் முடிந்ததும் மேடையில் ஒரு பெண் பேசுகிறாள்.