பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

22 22 மணி. தர்மம், வேலைக்காரி உன் கர்மம் எனறு தலை முழுகி நெடுநாளாகி விட்டது. நான் சொல்வது யூகம். ஆனந்தா! தகப்பனாரை அவன் எப்படிக் கொன்றான்? யால் அடித்தானா கத்தியால் குத்தினானா? தற் கொலையைத் தவிர வேறு வழியில்லாமல் செய்தான்... ஆனந் மணி! நீ என்னதான் சொல்கிறாய்? விட்டுவிடு. தடி மணி: என்ன சொல்கிறேனா! பழி வாங்கும் திட்டத்தை இதைக்கொண்டு அவனைக் கொஞ்சம் கொஞ்சமாக வாட்டி வாட்டி வதைக்க வேண்டும். ஊரார் இப்பொழுது அவனைப்பற்றி எவ்வளவு மதிப் பாகப் பேசுகிறார்களோ, அதே ஊரார் அவன் யோக்கியதை வெளிப்பட்டு அவனை ஏச வேண்டும். அதற்கான வழிகள் நாம் செய்ய வேண்டும். ஆனந்: மணி, நீ சொல்வது அவ்வளவும் உண்மை. வேதா சலத்தைப் பழி தீர்ப்பதற்கு இந்தக் கத்தி தீட்டிப் பயனில்லை. [கத்தியைத் தூக்கி எறிகிறான்.) மணி: சந்தோஷம். குழியில் விழ இருந்தாய்; தப்பித் துக் கொண்டாய். நான் வருகிறேன். 1 ஆனந் மணி! வேதாசலத்தின வேஷத்தைக் கலைக்க வேண்டுமென்று சொன்னாய். அதற்கான வழி சொல்ல வில்லையே! மணி: பாடு படாமல் பலன் கிடைக்குமா? பார், யோசித்து! [போகிறான். ஆனந்தன் கோவில் சென்று காளியை வேண்டுகிறான்.) பக்தர் (சொன்ன ஞாபகம்) மகா சக்தி வாய்ந்தவளப்பா இந்த மாகாளி! இந்த மாகாளியை மனதிலே பக்தி யோடு பூஜை செய்து நம்பிக்கையாகக் கும்பிட்டு வந் தால் இந்த உலகத்தில் நடக்காதது ஒன்றுமில்லை.