பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேலைக்காரி 23 மற்றவர்: கண்கண்ட தெய்வமாச்சேயப்பா இது. எந்தக் காரியமாயிருந்தாலும் சரி, கைமேலே பலன் கிடைக் கும் காட்சி--11. இடம்: காளி கோயில், இருப்: மணி, ஆனந்தன். ஆனந்தன் பரவசத்தால் பாடுகிறான். மணி வருகிறான்.] மணி: என்ன, ஆனந்தா! ஒரே பக்திப் பரவசம்? ஆனந்: மணி! காளியைக் கும்பிட்டுப் போகலாமென்று வந்தேன்...இந்தா பிரசாதம். மணி: பணம், கிணம் ரொம்ப கிறதோ? தாராளமாக கிடைக் [பிச்சைக்காரன் வருகிறான்.) பிச்சை: ஐயா! இந்த ஏழைக்கு ஒரு பிச்சை போடுங்க சாமி. மணி: இந்தாப்பா (போடுதல்). பிச்சை: சாமி! இது ஒரு ரூபாயிங்க... மணி: தெரியுமப்பா! இதை வச்சுக்க—இன்னும் நூறு பேர் கிட்ட போய் பிச்சையினு கேட்காமே இன்னிக்கு . பொழுதை நிம்மதியாக கழிச்சுக்கோ. ஆனந்: மணி! உனக்குத் தங்கமான மனசு! மணி: சரி, வா! கூல்ட்டிரிங் சாப்பிட்டுப் போகலாம்... ஆனந்: ஐயோ! நான் இன்றைக்கு விரதமாச்சேப்பா... (போகிறான்.) மணி: பைத்தியக்காரன். உழைக்கிறான், மாடுபோல; சம்பாதிக்கிற காசையெல்லாம் கற்பூரமாக வாங்கிக் கொளுத்துகிறான். (சிகரெட் பிடித்தல்) தூப தீப நைவேத்திய சமர்ப்பியாமி.