பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

24 காட்சி-12. வேலைக்காரி இடம்: வேதாசல முதலியார் வீடு. இருப்: வேதாசலம், முருகன், சொக்கன். வேத: என்னப்பா விசேஷம், இன்றைக்குக் கோவிலிலே. முரு: ஒன்னுமில்லீங்க... அந்தக் குளத்தங்கரை இருக்குதில்லீங்க... பாசனம் வே: எது? கார்மேகம் தரவேண்டிய கடனுக்கு விட்டுப் போனதுதானே... முரு: ஆமாங்க...அது நம்ப கையிலே வந்ததும், விளைச்சல் அதிகமாக இருந்துதுங்க, இந்த வருஷம்? அதனாலே தான் காளிக்கு ஒரு அபிஷேகம் செய்துவைச்சேனுங்க.. வே: அவசியம் செய்ய வேண்டியதுதான். முருகா! முனி யாண்டி தரவேண்டிய பாக்கிக்கு என்ன சொன்னான்? முரு: அவன் பெண்ஜாதி மலேரியாவில் படுத்து மூன்று மாசம் ரொம் கஷ்டப்படுகிறாளுங்க, பாவம்! வே: யாருக்குத்தான் கஷ்டமில்லை? எனக்குந்தான கஷ்டம கட்ட படி இருக்குது. இன்கம்டாக்ஸுக்குப் பணம் யேறி இறங்குகிறேனே, அது ஒன்றே போதும்! இந்தப் பயல் அங்கே காட்டவேண்டிய கணக்கை இங்கே வைத்து விட்டுவந்துவிடுவான்; இங்கே வைக்கவேண்டியகணக்கை அங்கே கொண்டுவந்து விடுவான்! இவனைக் கட்டிக் கொண்டு நான் படுகிற கஷ்டம் காளியாயிதான் கேட் கணும். சொக்கா! முனியாண்டி கடன் எவ்வள வுடா ஆகும்? சொ: அது ஆகுதுங்க 50 ரூபாயும் சொச்சம்... வே: பெரிய கோடீஸ்வரரு இவரு. சரியா... பார்த்துச் சொல்லுடா கழுதை! சொ: 50 ரூபாயும், ஐந்தே முக்காலணாவும் ஆகுதுங்க!