பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

26 அமிர்: அப்படி ஒன்றுமில்லிங்களே வேலைக்காரி வே: நாலு பெரிய மனிதர்கள் பார்த்து, நல்ல காரியத்தை முடிக்கும்போது நீ யார், அதைத் தடுக்கிறதுக்கு? இந்தா அமிர்தம்! கல்யாணங் காட்சியை முடித்து வைப்பது பெரியவங்க காரியம். வயிசாயிடுத்து, அது இது என்று என்னெனனமோ சொல்றியாமே!... சரி, போ! போய் வேலையைப் பாரு. முருகா! இதுகளெல்லாம் இப்படியேதான் சொல்லிக்கிட்டே இருக்குங்க. நாமும் சரி. சரியென்று மேளத்தை வச்சி கழுத்திலே தாலியைக் கட்டியாச்சுன்னா.. எல்லாம் சரியாப் போயிடும். இதுக்கௌனமோ, எனக்கு இஷ்டம்தான், பொண்ணுக்குத்தான இஷ்ட மில்லே என்று பாடறே. சரி, சரி! எல்லாம் ஒழுங்கா நடக்கட்டும். நீ போ முரு: வாரேனுங்க... காட்சி--13. 1 இடம்: வேதாசலம் வீடு. இருப் சரசா, அமிர்தம், மூர்த்தி. சரசா: என்னடி இது? காலா காலத்தில் வருவதில்லை? ஏண்டி இப்படிக் கண்ணைக் கசக்கிட்டு வந்து நிற்கிறே? அமிர்: நான் என்னத்தையம்மா சொல்றது! எஜமான் நீதியும் நியாயமுமா பேசவார்னு பார்த்தேன். அவர் எங்கப்பாவுக்குப் பக்க மேளமடிக்கிறார். சரசா : என்னடி சொன்னார் அப்பா? விமிர்: நான் கிழவனைத்தான் கட்டிக்கினமாம்! சரசா : ஹும், அப்புறம்? அமிர்: வயசானா என்னடி! நீ மட்டும் இப்படியே இருக் கப் போகிறாயா என்று கேட்கிறார். சரசா: (ஏளனமாக) அப்புறம்..