பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேலைக்காரி 27 அமிர்: இன்றைக்கு வருகிறார்களாம் பெண் பார்க்க. தலை சீவிக்கிடணுமாம்; புதுச் சேலையாம்! கூத் தாம! வயிறு எரியுதம்மா சரசா: வயிறு எரியுதாம்மா? ஐயோ...இவ. பெரிய ராஜகுமாரி! போடி, போய் வேலையைப் பார். பெரிய ராணி இவள். இவனைக் கட்டிக்கிடறதுக்கு ராஜா வரப்போகிறான். அந்தஸ்துக்கு தகுந்த மாதிரி தானடி இடம் அமையும். உங்க அப்பன், எங்க அப்பா கிட்டே விவசாயம் பார்த்து உன்னை வளர்க்கிறான். நீ எங்க வீட்டு வேலைக்காரி. இந்தப் பவிசுக்கு தலை நரைச்சுப் போச்சே என்று பார்த்தா முடியுமாடி! தலை நரைச்சா என்னடி? காசு பணம் இருந்தா போதாது? அமிர்: இஷ்டமில்லாத இடத்திலே வாழ்க்கைப்பட்டா வேதனையாக இருக்காதாம்மா? சரசா : ஏண்டி, இஷ்டமில்லை? எவனாவது பெரிய இடத் துப் பயல் அப்படி வலை கிலை வீசினானா? (மூர்த்தி வருகிறான்.) மூர்த்தி: சரசா! அந்தப் பொண்ணு என்னமோ தன் வயிற்றெரிச்சலைச் சொன்னா, எரிகிற நெருப்பிலே எண்ணெய் வார்க்கிற மாதிரி பேசுகிறாயே! உனக்கு நியாயமா? சரசா: எல்ல. நியாயமும் எனக்குத் தெரியும். இதில் நீ தலையிடாதே! (சரசா போகிறாள். மூர்த்தி: அமிரதம்! இந்தக் கலயாணத்தில் துளிகூட உனக்கு இஷ்டமில்லையே? அமிர் துளிகூட இஷ்டமில்லீங்க...