பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேலைக்காரி முத்: விருந்தாளிங்க 29 வந்துட்டாலே கால் ஓடமாட்டேங் குது; கை ஓடமாட்டேங்குது... முரு: உட்காருங்க... பரவாயில்லை. இது உங்க வீடு மாதிரி நினைச்சுக்கங்க. உட்காருங்க... மா. தம்பி: நம்ம வீட்டிலேயும் எல்லோரும் சௌக்கியம் தானுங்களே.. முரு: சௌக்கியந்தான்... வெத்திலை போடுங்க. மா. தம்பி: அதுக்கென்ன, போட்டாப் போகுது. தட்டை காணோமுங்களே. முரு: ஏ புள்ளே முத்தாயி! அந்த வெத்திலைத் தட்டை கொண்டு வாடி. ம:ட்தம்பி: உங்க எஜமான் கல்யாண விஷயத்தைப் பத்தி என்ன சொன்னாரு? முரு: அவர் சொன்னாரு. சரி, வெத்திலை போடுங்க. மா. தம்பி: பாக்கு இல்லீங்களே. முரு: இல்லீங்களா! ஏ புள்ளே முத்தாயி முத்தாயி: என்னாங்க? முரு: பாக்கு கொண்டுவாடி! முத்: பாக்கா... விருந்தாளி என்றாலே...தலை கிர்ருனு சுத்துதப்பா! முரு. ஏ, பிள்ளை முத்தாயி... முத்: என்னங்க? முரு: அந்தக் காப்பித் தண்ணியைக் கொண்டுவாடி. மா. தம்பி : எஜமான் என்ன சொன்னாரு? முரு: அவரு சொன்னாரு... மாப்பிள்ளைக்கு வயசாயிடுச்சி என்றார். மா. தம்பி: அப்படி ஒண்ணும் வயசாயிடலீங்க. கொஞ்சம் மா. தங்: ஐம்பதுக்கு மேலே ஐந்தோ பத்தோதான் அதிகம் இருக்கும். முரு: சரிதான்! போகிற வயசு..