பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேலைக்காரி முத்தாயி: என்னடி உளர்ரே உன் பாட்டுக்கு! 31 மா. த: நானாடி உளர்ரேன்; நீதாண்டி உவர்ரே .. முத்தாயி; போகுது போகுது என்று விட்டா மேலே மேலே போறியே... நாக்கை உள்ளே வச்சு பேசு.. மா.த: நாக்கு உள்ளேதான் இருக்கு; உன் மகள் மாதிரி நீண்டுக்கிட்டா இருக்கு' பல் முத்தாயி: என்னடி சொன்ன? என் மகளுக்கு நீண்டுக்கிட்டு இருக்கா? உனக்குத்தாண்டி நீண்டுக்கிட்டு இருக்குது. இவ பவுசுக்கொரு கொண்டை; காலுக்கு வேறே தண்டை; பெண் பார்க்க வந்துட்டாளாம் பெண்ணை போடி [மாப்பிள்ளை தம்பி வருகிறார்] மா. தம்பி : என்னடிஇது! அவளைன்னவென்று நினைச் சுக்கிட்டே ! இல்லை, என்னைத்தான் என்னவென்று நினைச் சுக்கிட்டே? முத்தாயி: அட, அறிவு கெட்டவனே! அவளைப்போலத் தான் இவனும் பேசுறான். வீட்டிலே என்ன நடந்தது, ஏது நடந்தது என்று கேட்டா... இவள் என்ன சொல்றது! மா. தம்பி: இந்தா ..மரியாதையாகப் பேசு. மா. த: நீ சும்மா இரு அண்ணே; இந்த வீட்டிலே பெண் பார்க்க வந்ததுக்கு நம்ம புத்தியைச் செருப்பாலே அடிச்சிக்கிடணும்.. [முத்தாயி செருப்பைத் தூக்கி எறிகிறாள். முத்தாயி: இந்தாடி... அடிச்சுக்கோ... மா. தம்பி: இன்னும் ஏதாவது தூக்கிப்போட்டே [போகிறார்கள்] [முருகேசன் வருகிறான்]