பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

32 முத்தாயி: ஜமுக்காளம் வேறு இது வேலைக்காரி கெட்ட கேட்டுக்கு இரவல் முரு: ஏ புள்ளே முத்தாயி! என்னடி. இது? முத்தாயி: கேட்டிங்களா... சமாச்சாரத்தை? அந்தக் குச்சுக்காரி வந்தாளே... அவ... முரு: விருந்தாளிகள் எங்கேடி புள்ளே? முத்தாயி: அவங்க எழவெடுத்து நாசமாப் போக... முரு: என்னடி புள்ளே, சபிக்க ஆரம்பிச்சுட்டே! முத்தாயி: அந்தக் கொண்டைக்காரி வந்தாளே, அவ, 'உன் விடியா மூஞ்சி பிள்ளை எனக்கு வேண்டாம். 'அப் படி இப்படி' என்று சொல்லி, என்னை வாயில் வந்தபடி. பேசி, என் பவுசை வாங்கிட்டா. (முத்தாயி அழ ஆரம்பித்துவிட்டாள்.] முரு: அமிர்தம்! என்னம்மா இது? உங்கம்மா கதர்ற கதறல் என் காதைக் குடையிது. என்னம்மா நடந்தது? அமிர்: ஒன்றுமில்லேப்பா.. அந்தம்மா என்னைக் கூப் பிட்டாங்க. போனேன். உடனே, 'அடி ஏண்டி, உன் கண்ணு இப்படிப் போயிருக்குது? பல்லு ஏண்டி இப்படி நீண்டுக்கிட்டு இருக்கு?' என்று என்னென்னமோ சொன்னாளப்பா முரு: அப்படியா கொன்னா...அடிப்பாவி! கண்ணு இருக்கு, அரிக்கன்வைட் மாதிரி; பல் இருக்குது பச்சரிசி மாதிரி! விட்டேரை பார் அவளை? முத்தாயி: ஏ,எங்கே போறே? காட்சி--15 இடம்: நந்தவனம் இருப்: மூர்த்தி, அமிர்தம், சரசா (நந்தவனத்தில் மூர்த்தியும் சந்திப்பு] அமிர்தமும்