பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

34 வேலைக்காரி ஒரு வேலைக்காரி கிட்டே கொஞ்சுவதும். குலாவுவதும் வேலையாய் போய்விட்டது உனக்கு! (அமிர்தம் குடத்தைக் கீழே போட்டுவிடுகிறாள்.) ஏண்டி! குடத்தை இப்படிக் கீழே போட்டிருக்கியே, யார் வீட்டுச் சொத்தடி இது? அமிர்: ஏன் அக்கா, இப்படியெல்லாம் பேசுறீங்க? சரசா: அக்காவாய், அக்கா! இந்தாடி... இனிமே... என்னை இந்த மாதிரிக் கூப்பிடாதே; இதே பழக்கந்தானே நாளைக்கு நாலு பெரிய மனுசங்க வந்திருக்கும்போதுகூட வரும்? போடி, போய் வேலையைப் பார்! மூர்த்தி: பஞ்சவர்ணக் கிளியைப் பிடித்துக் கொஞ்சி விளையாடலாம் என்று எண்ணிப் பனைமரம் ஏறும்போது பறந்தோடிவிட்டது, ஜாதிபேதமென்கிற தரித்திரக் கம்பிகள் வேறு; என்ன உலகம் இது? காட்சி-16 இடம் கோவில் கூண்டுக்கு; இருப்: ஆனந்தன், மணி, காளி, மற்றும மணிக்கு கடன் கொடுத்தவர். க. கொ : டேய்! நீ என்கிட்டே பணம் வாங்கலையின்னு காளி முன்னாலே கற்பூரத்தை அணைத்திடு பார்க்கலாம். மணி: இப்ப சொன்ன பாரு, அது சரி! வா, போக EJTL. க.கொ: (சூடத்தைக் கொளுத்தி) டேய்! எங்கே அணை பார்க்கலாம்.... லேசிலே உன்னை விடமாட்டேன். ஆமா.. மணி: இந்தக் காளி அறிய சொல்லுகிறேன். உன்கிட் டேயிருந்து கால் காசு வாங்கலே (சூடத்தை அணைக்கிறான்) போதுமா? க.கொ : அடப்பாவி! அணைச்சுட்டியா? காளி எதிரிலே பொய் சத்தியம் பண்றியே, நீ உருப்படுவியா?