பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

38 வேலைக்காரி காட்சி-19 இடம்: பொது வழியில் ஒரு மரம் இருப்: ஆனந்தன், மணி. (ஆனந்தன் விரைவாக தூக்குப் போட்டுக் கொள்வதற்காக ஒரு மரத்தினடியில் போகிறான்] மனச்சாட்சி: மரக்கிளையில் பிணம். உன் தந்தை யின் பிணம். அவர் செத்தார், அக்கிரமக்காரர்களின் பணத் தாசையினால். அவன் வாழ்கிறான். நீ சாவதா? இல்லை. நீ வாழவேண்டும்; உன் தந்தைக்காக நீ வாழத்தான் வேண் டும். நயவஞ்சகர்களுக்கு நல்ல பாடம் கற்பிக்க நீ வாழத் தான வேண்டும். [மணி சைக்கிளில் வருகிறான். வழியில் மரம் கிடக்கிறது] மணி: நான்சன்ஸ்! போகிற பாதையில் மரமும் மண் ணாங்கட்டியும். ஆனந்தா! ஏய், ஆனந்தா! என்ன இது? ஆனந்: மணி! இந்த உலகத்தில் ஏழைக்கு வாழ இட மில்லையா? உழைப்பவனுக்கு இங்கு வாழ உரிமையில்லையா? மணி: என்னப்பா நடந்தது? எழுந்திரு! ஆனந்: எல்லாம் நடந்துவிட்டது. வேலை போயிற்று. மானம் போய்விட்டது. கடன் கொடுத்தவன் நாயைப்போல ஏசினான்.உனக்கு மானமில்லையா என்று கேட்டான்... மணி: பாவம். அனுபவமில்லாதவன்! உன்னை யாரோ கோட்டா பண்ணிவிட்டிருக்கிறார்கள். ஆனந்: மணி! அவன் சொன்னது அவ்வளவும் உண்மை. இனி நான் எங்கேயாவது திரு வேண்டும் அல்லது பிச்சை எடுக்க வேண்டும் அல்லது எங்கேயாவது விழுந்து சாகவேண் டும். மாகாளி! உன் மகனை இக் கோலத்தில் வைக்கலாமா? மார்கழி மாத பூஜைக்காக மார்பு உடைய சம்பாதிச்சேனே! என்னை இக்கதிக்கு ஆளாக்கலாமா?