பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேலைக்காரி 39 மணி: காளியின் வரப்பிரசாதம் கிடைக்குமென்று தவம் கிடந்தாய். ஆனால் உனக்குத் தெரியுமா ஆனந்த்; காளியின் அருள் யாருக்குக் கிடைத்ததென்று? ஆனந் எந்தப் புண்ணிவானுக்குக் அந்தப் பாக்கியம்? கிடைத்ததோ. மணி: சாதாரணமானதல்ல அந்தப் பாக்கியம்! ஒரு ஜமீன்! பெரிய கிராமம்! காளியை அவன் கும்பிடுவதில் அர்த்தமிருக்கிறது அன்னக் காவடி நீ! அவளை விழுந்து விழுந்து கும்பிட்டாய்...கால் வலிக்குமே தவிர, ஒன்றும் கிடைக்காது.. வழி ஆனந்: யாருக்கு மணி கிடைத்தது, காளியின் அருள்? மணி: உயர்திரு வட்டியூர் ஜமீன்தார் வேதாசல முதலி பாருக்கு... ஆனந் ஹா ! அந்தப் பாதகனுக்கா கிடைத்தது? அவன் செய்த பாவங்களுக்கு அவன் கண்களைக் குருடாக்க வேண் டும்; அவன் கால்களை நொண்டியாக்கி இருக்க வேண்டுமே! அவனுக்கா...காளியின் அருள் கிடைத்தது? மாய் மணி: ஆமாம்பா ஆமா... காளியின் அருள் கிடைத்த சந்தோஷத்தினால்தான் இன்று காளி கோவிலில் அமர்க்கள பூஜை நடக்கிறது. இன்று மாலை தேவிக்கு! பணி யாரம் - பாயாசத்தோடு விருந்து பக்தர்களுக்கு! போய்ப் பாரப்பா, அந்த வைபவத்தை! போய்ப் பார்! [மணி போகிறான்.] ஆனந்: காளியின் அருள்? மோசக்காரனுக்கா அருள்? அதற்குப் பூஜை? பாவி நடத்தும் பூஜை! பஞ்சமா பாதகன் நடத்தும் பூஜை! வஞ்சகன் நடத்தும் பூஜை... [கோபமாகப் போகிறான். கோவிலுக்கு]