பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

40 வேலைக்காரி காட்சி- 20. இடம்: காளி கோவில் இருப்: வேதாசலம், சொக்கன் [காளி கோவிலில் பூஜை நடக்கிறது] வே: டேய், சொக்கா! பார்த்தியாடா... சொ: பஸ்டுங்க.. வே: சீ, கழுதை! அதையாடா கேட்டேன? வாசிப் பதைக் கேட்டு மெய்மறந்து நிற்கிறானே பக்கிரிசாமி- அவன் கொடுக்க வேண்டிய போன மாதத்து வட்டிப் பணம் இன்னும் வந்து சேரல்லையடா. சொ: ஆமாங்க.. கேட்கலைங்க. சமயம் கிடைக்கிற போது கேட்டு வாங்கிடணுங்க.. வே: இந்த மாதிரியெல்லாம் இருந்தா உருப்படாதுடா! இன்னிக்கு மட்டும் ஆயிரம் ரூபாய்க்கு மேலே செலவழிஞ்சு போச்சுடா கழுதை [பூஜை முடிந்து வேதாசல முதலியார் உட்பட எல்லோரும் போகிறார்கள். அவர்கள் போன வுடன் ஆனந்தன் வருகிறான்.) காட்சி-21. இடம்: காளி கோயில் இருப்: ஆனந்தன், மணி. ஆனந்: பக்தன் வந்திருக்கிறானே, பூஜை வேளை தவறி, ஏன் என்று பார்க்கிறாயா? ஏ, காளி! உன்னையே நம்பித் தவம் கிடந்த என்னை, நீ கைவிடலாமா? மனிதர் கைவிட் டாலும் மாதா காப்பாற்றுவாள் என்று நம்பி இருந்த என்னை இக்கதிக்கு ஆளாக்கலாமா நீ? எவனுடைய சதியால். வஞ் சனையால் என் குடும்பம் நாசமாயிற்றோ அவனுக்காம்மா நீ அருள் புரிவது? இது முறையா? வேதாசல முதலி செய் துள்ள பாவங்களை நீ அறியமாட்டாயா? எத்தனை குடும்