பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

42 வேலைக்காரி யோர்களின் துயர்வு! ஏமாந்தவர்களின் ரத்தம். பக்தா! நீயா இப்படிப் பேசுகிறாய் என்று கேட்கிறாயா நீ ? கேள், தைரிய மிருந்தால்! இருதய சுத்தியோடு பதில் கூறுகிறேன். கேள்! ஊரைக் கெடுப்பவன் உன்னை பூஜித்தால் அவனை ரக்ஷிப் பதா? உனக்கு நீதியின் லக்ஷணமே தெரியாதா? நீதிக்கும் நேர் கமைக்கும் உனக்கும் நெடுநாள் பகையா? உனக்கு தர்ம தேவதை என்ற பெயர் தகுமா? என் பூஜையை ஏன் ஏற் றுக் கொண்டாய்? ஏற்றபின் திக்கற்ற எனனை ஏன் தவிக் கச் செய்தாய்? என் உழைப்பை உண்டு கொழுத்தவன் என்னை வஞ்சித்தால், உனக்கு அடிமையாக இருந்து உழைத்ததற்குப் பலன்தான் என்ன? என் உழைப்பை உண்டு கொழுத்தாயே, உனக்குக் கருணை இல்லையா? நெஞ்சிவே ஈரமில்லையா என்று கேட்பேனல்லவா! அதுபோலவே உன் னைக் கேட்கிறேன். நீ செய்தது நியாயமா? ஏன் பேசாமல் இருக்கிறாய்! எங்கே என் கேள்விக்குப் பதில்? ஏழையைப் பணக்காரன் அடிக்கும்போது எப்படி ஏழை வாய் திறவாமல் இருக்கிறானோ அப்படித்தான் இருக்கிறாயோ நீயும்? காளி! ஏழையின் மனம் ஓர் எரிமலை! அதிலிருந்து கிளம்பும் ஜுவாலையைப் பார்! ஹ...ஹ...ஹ...ஹ...பார், ஜுவாலையை ஹ ஹ ஹ... ஹ...! [வெறிச்சிரிப்பு) ஏ பாவம்! நீ என்ன செய்வாய்! நான்தான் பித்தன். உன் னையே நம்பிக்கிடந்தேன். அது என் பைத்தியக்காரத்தனம். நயவஞ்சகத்தால் வேதாசல முதலி கொழுத்தான். அது உன் அருளால் வந்தது என்று எண்ணினேன். அதுவும் என் பைத் தியக்காரத்தனம். ஆனால் எனக்கு இருந்த போதை தெளிந் தது. (ஆட்கள் வந்து ஆனந்தனை விரட்டுகிறார்கள். ஆனந்தன் ஓடுகிறான்...அங்கு மணி சைக்கிளில் வருகிறான். ஆனந்தன் மணி மீது மோதுகிறான்] மணி: யாரடா நீ?நில்லுடா!அடே,நீயா? ஆனந்தன்... என்ன இது?