பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேலைக்காரி 43 ஆனந்: மணி, மணி! என்னைக் காப்பாற்று. ஆட்கள் துரத்திக்கொண்டு வருகிறார்கள். நான் எங்கேயாவது போய் ஒழியணும். மணி: என்ன, என்ன? ஆனந்: அவசரத்தில் என்ன என்னமோ செஞ்சிட்டேன்! மணி: ஏன், யாரையாவது கொலை செய்துவிட்டாயா? ஆனந்: இல்லை... அவமானப் படுத்திவிட்டேன். மணி: யாரை! வேதாசல முதலியாரையா? ஆனந்: இல்லை...காளியை! மணி: ப்பூ ! இவ்வளவுதானா.. ஆனந்: மணி! அதோ...ஆட்கள் வருவதுபோல் சத்தம் கேட்குது. நான் எங்கேயாவது சீக்கிரம் ஒளியணும். மணி: பயப்படாதே. அதோ தெரியும் கொல்லையைத் தாண்டிப் போனால் அதற்குப் பக்கத்தில் ஒரு பாழுங்கிணறு இருக்கிறது. அதிலே போய்ப் பதுங்கிக் கொள். வர்ர ஆட் களை நான் பார்த்துக் கொள்கிறேன். நீ போப்பா... ஜனங்கள்: ஏம்பா! இந்தப் பக்கம் யாராவது ஒரு ஆள் வந்தானா? மணி: ஓ, நில்லுங்கள்! சைக்கிளைத் தூக்கிக் கொள் கிறேன்... ஆளா? கட்டையும் நெட்டையும் இல்லாம நடுத் தரமா ஜனங்கள்: ஆமா, ஆமா! கருப்பும் சிகப்பும் இல்லாமே சாம்பல் நிறமாய் ஒரு ஆளு.. மணி: (வழியை மாற்றிக் கூறி) அடடே! இப்பத்தான் இந்தப் பக்கம்தான் போறான். ஓடுங்க, ஓடுங்க! நானும் வரேன்.. (மணி, ஆனந்தன் மறைவிடத்திற்கு வருகிறான்.]