பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

44 வேலைச்காரி ஆனந்: மணி, மணி! சீக்கிரமா வா! இங்கே ஒரு மூட்டை இருக்குது... மணி: தையலா? இருவரும் பிடி, தூக்கு, தூக்கு (அவிழ்த்தால் பிணம்) மணி: அ. டே! எங்ப்பா ஓடறே! நில்று ஆனந்தா! உன் அதிர்ஷ்டம் இருக்கிறதே, அதுவேறே யாருக்கும்வராது. மூட்டையைத் தூக்கினால் பிணம். அசல் உன் மாதிரியே இருக்குது.எவன் இவனை இப்படிச் செய்திருப்பான்? ஆனந்: எந்த வேதாசலம் இவனைப் பழி தீர்த் தானோ... [அவன் பையிலிருந்ததை எடுக்கிறார்கள்.] மணி: சட், கத்தை கத்தையாக காகிதம்; டைரி; செம்பால் அடிச்ச காசுகூட இல்லை. ஆனந்தா! டைரியில் என்ன எழுதியிருக்கு என்று பார்! ஆனந்: மணி, இவன் சரித்திரம் எழுதியிருக்கு மணி: சரித்திரமா? எந்த ஊர் ராஜா? எத்தனை ராணி மார்? பாரப்பா பார். ஆனந்: கேலி இருக்கட்டும் மணி! இவன் பெரிய சீமான் வீட்டுப் பிள்ளை பெயர் பரமானந்தன்! மேவார் விலாசம்; இந்தப் பக்கம்தான்... மணி: மேவார் விலாசமா அப்படி ஒன்றும் இல்லையே! அங்கே ஒரு கிழம் அல்லவோ நடமாடிக் கொண்டிருக்கிறது; ஆனந். அது இவன் தாயார் ..படித்துப் பார்! மணி: ஆனந்தா, ஒரு பிணம் உன்னை நடைப்பிண மாக்கிவிட்டது; இந்துப் பிணம் உன்னை லட்சாதிபதி ஆக் கப் போகிறது. ஆனந் ஆஉனக்கென்ன மூளை