பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேலைக்காரி 45 மணி: சுறுசுறுப்பாக வேலை செய்கிறது. கிணற்றுக்கு உள்ளே போனது பராரி ஆனந்தன்; வெளியே வந்தது பணக் கார பரமானந்தன்! ஆனந் என்ன, மணி! உனக்கென்ன, பைத்தியமா? நான் பரமானந்தனா? மணி: ஆம்! பரமானந்தன் கொலை செய்யப்பட்டது தமக்குத்தானே தெரியும்? ஆனந்: அதனாலே மணி: நீ பரமானந்தனாக ஊரில் உலவ வேண்டும். இனி அவனுக்குப் பதிலாக நீ நேராக மேவார் விலாசத்தில் நுழையவேண்டும், பரமானந்தனாக. பிரைவேட் செக்ரட்டரி நான் உனக்குப் ஆனந்: மணி! உனக்கென்ன, உடம்பு ஊறுகிறதா? மணி: இல்லை. உன் வாழ்க்கை மாறுகிறது. பொருள் இல்லாமல் புலம்பினாய். இனி போக போகத்தில் புரளப் போகிறாய். முன்பு வேதாசலந்தால் வேதனை அடைந் தாய். இனி அவனை நீ வெல்லலாம். ஆனந்: எப்படி மணி? மணி என் அப்பன் பிணநாதன் அருளால்! ஆனந். மணி! உனக்குப் பைத்தியம்! வேஷம் ஊரை ஏமாற்றும். அவன் தாயார். . மணி: நமக்கு அந்தக் கஷ்ட ததை வைக்கவில்லை. அந்த அம்மாளுக்கு இரண்டு கண்களும் குருடு. ஆனந்: உனக்கு எப்டித் தெரியும்? மணி: மற்றதெல்லா தெரிந்ததுபோல! அந்த அம் மாளுக்குக் கண் சௌக்கியமில்லாமலிருந்து ஆப்ரேஷன் செய்து கண் குருடானது எல்லாம் டைரியில் இருக்கிறது. ஆனந்: மணி, அப்படியானால் நான் பரமானந்தனாக நடித்தால் நம் சூது வெளியாகாதே?