பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

46 வேலைக்காரி மணி: ஆகாது, ஆகாது. பக்கத்துணை நான் இருக்கி றேன். நீ எதற்கும் கவலைப்படாதே. நான் போய் உடை களெல்லாம் வாங்கி வருகிறேன். அதுவரைக்கும் யார் கண் ணிலேயும் தென்படாதே. இதைப் பற்றி மூச்சுகூட விடாதே. அதிர்ஷ்டம் வந்து அணைத்துக் கொள்ளும்போது அடிமுட் டாளாக இருக்காதே. நான் சொன்னது ஞாபகமிருக்கட்டும். போகுமுன்பு இதற்குப் போடப்பா (பிணத்திற்கு) நாலு கும்பிடு. காட்சி-22 இடம்: பாழுங் கிணறு அருகில் இருப்: மணி,ஆனந்தன் (ஆனந்தன் மணி புதிய உடைகள் வாங்கிப் போட்டுக் கொண்டு வருகிறார்கள்.] மணி: இடியட்! ஓ, நீயா? ஆனந்தா கவனி. டைரியில் உள்ள விஷயங்கள் நனறாக ஞாபகமிருக்கட்டும். கிழவியின் ஒரே மகன் நீ.10 வருஷ காலமாக சொந்த வீட்டை, லிட் டுப் புறப்பட்டு லண்டன், பாரீஸ் முதலிய இடங்களைச் சுற்றி இருக்கிறாய், தாயாருக்கு கண் ஆப்ரேஷன் என்று தெரிந்ததும், சொந்த ஊருக்குத் திரும்பி இருக்கிறாய். ஹூம்...ஞாபகத்தில் வைத்துக் கொள் ஆனந்: மணி! பரமானந்தன் கொலையின் காரணம் என்ன என்று பார்த்தோம் டைரியிலே? [மணி பார்க்கிறான்] மணி: விலை உயர்ந்த வைரங்கள் அவனிடம் இருந் தன. அதை உளவு தெரிந்தவன் எவனோ அவனைக் குளோஸ் பண்ணி மூடியிருக்க வேண்டும். அதைப்பற்றி உனக்கென்ன கவலை! மனுஷன் உனக்காகத்தான் 'அவுட்' (out) ஆகி யிருக்கிறான். வா, போகலாம்... (ஆனந்தன், மணி இருவரும் மேவார் விலாசத்தில்)