பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேலைக்காரி 47 பர: காட்சி-23 இடம்: பரமானந்தன் இல்லம் இருப்: பரமானந்தன், தாயார், ஆனந்தன். மணி. பரமானந்தா! இத்தனை வருஷம் கழித்தா கிலும் வந்து சேர்ந்தாயே, அதுவே போதும். பரமானந்தா! இந்தப் பத்து வருஷம் நான் கஷ்டப்பட்டது போதும்! இனிமே இந்தப் பாரத்தை என்னாலே தாங்க முடியாது. மணி: அம்மா! இனிமேலுமா உங்களுக்கு அந்தக் கஷ்டத்தை வைப்போம்? இனிமே வீட்டை விட்டுப் போற தில்லை என்று உங்க பிள்ளைகிட்டே சத்தியம் வாங்கிக்கிட் டேன். ப.தா: தம்பி, நீ யாரப்பா? நல்ல பிள்ளையாண்டா னாக இருக்கிறாயே! உன் பெயரென்ன தம்பி? பர: அம்மா! அவன் என் நண்பன். பெயர் மணி. மணி: ஆமாம்மா! சிநேகிதனுக்குச் சிநேகிதன். செக்ரட்டரிக்கு செகரட்டரி ப.தா: என்னமோப்பா... உங்களையெல்லாம் பார்க் கிறதுக்கு எனக்குக் கொடுத்து வைக்கவில்லை. பரமு! நீ நல்ல படியாக வந்து சேர்ந்ததுக்கு, காளி கோவிலுக்கு ஒரு அபிஷேகம் செய்யலாம்னு இருக்கேன். பர: (கோபமாக) காளி கோவிலுக்கு அபிஷேகமா? மணி: அம்மா! அபிஷேகம் எதற்கு? ஒரு பஸ்ட் கிளாஸ் டீ பார்ட்டி வைப்போம். நாலு பெரிய மனுஷங்க வந்து நம்ப பரமானந்தனைப் பார்க்கட்டுமே! ப. தா : மணி, அதுவும் நல்ல யோசனைதான். அப் படியே செய்துடுங்க. அப்பா, மணி! எனக்கு ஒரு ஆசை .. மணி: என்னம்மா அது?