பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

48 வேலைக்காரி 1).தா: என் காலத்திலேயே பரமானந்தனுக்கு ஒரு கல்யாணம் செய்துவிடுவோம்.. மணி: ஓ...அப்படியே செய்துடுவோம்! ப.தா: பரமானந்தனுக்குப் பொருத்தமான இடத்தை யும் மனசிலே நினைச்சுக்கிட்டு இருக்கேன்... பர: யாரம்மா அது? ப.தா: அவள்தான் நம்ம சரசா... பர: சரசாவா...எந்த சரசா? ப.தா: வட்டியூர் வேதாசலத்தின் மகள். ப: (கோபமாக) என்ன, என்ன! வேதாசலத்தின மகளா? மணி: அட, ஏம்பா கோபப்படுறே? அம்மா! பரமா னந்தன் சில சமயங்களில் சந்தோஷப்படுறதும் கோபப்படு றதும் ஒன்று மாதிரியே இருக்கும். பல ஊர் சுற்றினதே கோளாறு. அவன் கிடக்கிறான்; கல்யாணத்தை நாம் நடத்திடுவோம். ப.தா ஆமாப்பா மணி! பரமானந்தா வா, போக லாம்... மணி: அம்மா...டீ பார்ட்டி? ப.தா: பேஷா நடத்துங்கப்பா. மணி: பரமு இன்விட்டேஷன்... பற: செக்ரட்டரி சார்! எல்லாம் நீங்க பார்த்துக்குங்க.. [மணி அழைப்பிதழ் எழுதுகிறான். பாக்கியம் வருகிறாள் ] பாக்கியம்: ஸார் .. மணி : ஓ, நீயா...? பாக்: இந்தாங்க காப்பி மணி: ரொம்ப தாங்க்ஸ்.. நீ யாரம்மா? வேலைக்காரி