பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

50 வேலைக்காரி சொ: என்னமோங்க.... ஊரு பூரா பேசிக்கிறாங்க... ஒரு சந்தோஷகரமான செய்தின்னு... வே: அது என்னடா சந்தோஷகரமான செய்தி? சொ: சூட்சமமா..சொன்னா கோபிச்சுக்கிறீங்களே! வே: பெரிய அரசியல்வாதி இவரு... சூட்சமமா சொல் றாராம்! விளக்கமா சொல்லுடா கழுதை! சொ: பரமானந்த முதலியாரு இந்த ஊருக்கே பெரிய பணக்காரறாங்க? வே: ஆமா.. பணக்காரங்கதான். யார் இல்லையென்று சொன்னாங்க? நல்ல சொத்து; பூர்வீக குடும்பம்; ஒரே மகன்; நல்ல கீர்த்தி சொ: அவர்தான் உங்களுக்கு மருமகப்பிள்ளை ஆகப் போறாருன்னு ஊரெல்லாம் ஒரே பேச்சா இருக்குது. வே: சொக்கா! நீ சொன்னபடி நடத்துட்டா, இந்தப் பக்கத்திற்கே... பக்கம் என்ன, இந்த ஜில்லாவிற்கே நம் குடும்பத்திற்கு ஒரு தனி கீர்த்தி அது நடக்கணுமே சொக்; நடத்திடலாமுங்க... என்ன பிரமாதம்? வே: இதென்னடா, இப்பவே நீ மாப்பிள்ளை வீட்டுக் காரன் மாதிரி பேசுகிறாய்? சொ: பின்னே என்னாங்க, புரிந்து கொள்ளாமலே பேசுறீங்களே! நம்ம சரசா அம்மாவை டீ பார்ட்டியிலே நாட்டியம் ஆடணும்னு கேட்டிருக்காங்களே, அதிலே தெரிய லீங்களா...? வே: டேய் சொக்கா! இருக்குடா உனக்கும் கொஞ்சம் மூளை... காட்சி-25 இடம். பரமானந்தன் வீடு இருப்: மணி, பரமானந்தன, வேதாசலம், சரசா, மற்றும் விருந்துக்கு வந் திருப்பவர்கள்.