பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணி: பரமானந்தா! ஆடம்பரமாய் இரு டீ பார்ட்டிக்கு . வருகிற ஆட்கள் உன்னைக் கண்டு அப்படியே சொக்கிவிட வேண்டும்.

பர: பார்ப்போம். எவனெவன் வருவானோ, என்னென்ன கேட்பானோ?

மணி: சட்! கோழையைப்போல் பேசாதே! இப்பொழுது நீ ஏழையல்ல; 'க்கமான்' என்று கூப்பிட்டவுடனே ஓடி வர பணியாட்கள். இரும்புப் பெட்டியில் இருக்கிறது இரண்டு லட்சம் ரூபாய். பூமி இருக்கிறது; கார் - பங்களா இருக்கின்றன; நகை; வேலை செய்ய வேண்டிய ஆட்கள் இருக்கின்றனர்.

பர: மணி! இதையெல்லாம் பிறர் சொத்தென்று நினைக்கும்போது திகிலாக இல்லையா?

மணி கோழைபோல் பேசாதே. எந்தப் பொருளும் ஒருவனிடம் இருக்கும்போது அது அவனுடையது. அதற்கு முன்பு அது வேறொருவனுடையது. ஆதலால் நீ எதை எதையோ எண்ணி ஏமாளியாகாதே! ஆடம்பரமாக இரு. யாராவது வந்து ஏதாவது கேட்பார்கள். (உதாரணமாக) ஒருவன் வந்து 'மிஸ்டர், பரமானந்தன்! நீங்கள் எத்தனை நாட்கள் பாரீஸிலே வாசம் செய்தீர்கள்?" என்று கேட்பான். நீ புருவத்தை நெளித்துக்கொள். கருள் சுருளாகப் புகை விடு. அலட்சியமாக அவனைப் பார். 'பாரீஸ்! மிஸ்டர் அது தானே எங்களுக்கு, 'ரெஸ்டிங் பிளேஸ்' என்று நீ சொல்ல வேண்டும். உடனே நான் ஆரம்பித்து விடுகிறேன். பாரீஸ் பியூட்டிபுல் சிட்டி-- பாரீஸ் ஸென்ட்--அது இது, அப்படி இப்படி என்று திணற அடித்துவிடுவேன். பிறகு தண்ணீர் தெளித்தல்லவா எழுப்பவேண்டும்.

பர: பதில் கூற முடியாத சில கேள்விகள் வருமே. எவனாவது பாரிஸுக்கும் லண்டனுக்கும் கப்பல் கட்டணம் எவ்வளவு என்று கேட்டால்..