பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணி: ஹும்! பயப்படாதே அலட்சியமாக, 'வீ டிராவல் ஒன்லி பை பிளேன்' தெட்இஸ் இன்னாவ்! (We travel by Plane. That is enough.

பர மணி/ இவ்வளவு கூத்து ஆட வேண்டியதிருக்கிறதே!

மணி: அது. இந்த இடத்துக்குத் தேவை ஆனந்த். நீ இப்போது குடியேறி இருக்கிற உலகம் இருக்கிறதே, அது பணக்கார உலகம்; மிகவும் விசித்திரமானது.

பர: ஆம்! முட்டாள் புத்திசாலியாகப் போற்றப்படுவான். வீரன் கோழைப் பட்டம் பெறுவான்; கோழை வீரன் பட்டம் பெறுவான். அவலட்சணமாக இருந்தாலும் அழகனாகக் கருதப்படுவான். ஆனால் இது முறையா? சரியா? நாமும் இதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டுமா?

மணி. ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை ஆனந்த்! இந்த உலகத்திலிருந்து நம்மை அடிமை கொண்டுள்ளவர்களை நாம் ஆட்டிவைக்க வேண்டுமென்றல்லவா சொல்லுகிறேன். ஆனந்தா! அகில உலகத்தை ஆட்டி வைக்கும் பணம் இருக்கிறதே, அதை நீ இப்பொழுது ஏராளமாய்ப் பெற்றிருக்கிறாய். ஆகையால் நீ எதைச் செய்தாலும் தகும்; என்ன சொன்னாலும் நடக்கும் வா, போகலாம்.

தேநீர் விருந்துக்கு இருவரும் வருகின்றனர்.)

மணி: இவர்தான் வட்டியூர் ஜமீன்தாரி. உயர்திரு வேதாசல முதலியார்! பெரிய மனிதர். பர: (முதலியாரைப் பார்த்து) நிறைய தெரியும், உங்ளைப் பற்றி. ஆனால் பார்க்கத்தான் இல்லை. பர: சீமாட்டிகளே! சீமான்களே! நான் பல வருஷ காலமாய் ஐரோப்பா தேசத்திலே சுற்றிக் கொண்டிருந்து விட்டேன். அதனால் உங்களில் பலரைக் காணும் பாக்கியம் இல்லாமல் போய்விட்டது. எங்கள் பூர்வீக ஐமீனை விட்டு விட்டு இந்தப் பக்கம் வந்தவுடனே அதே சோகத்தால்