பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லாம் நம்ம கையிலா இருக்கிறது; கடவுள் செயல் என்று சொன்னேன் பரமானந்தனுடைய தயாளகுணமும், அடக்கமும், நன்னடத்தையும், ஒழுக்கமும் நம் குலத்திற்கே பெருமைதரக் கூடியது. ஆதலால் நான் பரமானந்தனுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். [கைதட்டல்] வேதா: தம்பி பரமானந்தம், நான் வரட்டுமா? பர: சரி, செய்யுங்கள் மா..மா.. மணி: அடே! மாமா என்றுதான் சொல்லேன் வேதா: அதற்கென்ன, தம்பி இஷ்டப்பட்டால்... மணி: இஷ்டம் என்னாங்க.. கல்யாணத்தை நடத்திடு வோம்! வே: அப்ப...சரி. [பரமானந்தனுக்கும் சரசாவுக்கும் கல்யாணம் நடக் கிறது. கல்யாணம் நடந்த பிறகு பரமானந்தன்.) காட்சி-26 இடம்: வேதாசலம் வீடு இருப்: பரமானந்தன், மணி. பர: ஆடம்பரம், ஆடல், பாடல், விருந்து, வேடிக்கை இவைகளுக்கு நான் ஒரு பதுமை. என் லட்சியம், சபதம் எல்லாம் எங்கே? எனக்கு இது ஒன்றுமே பிடிக்கவில்லை மணி. நான் பஞ்சை சுந்தரம் பிள்ளை மகன். அவர் ஏழை; ஆனால் யோக்கியர். மானத்திற்காக மரக்கிளையில் பிண மானார். அவருடைய மகனா நான்! சே, சே! இதை என்னால் சகிக்கவே முடியாது. மணி: என்னப்பா அது? என்ன செய்ய வேண்டுமென்கிறாய்?