பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமை பேசிக் கொள்கிறாரே ஸ்ரீமான் ஸ்ரீமதி சரசாவைப் பார்த்து, அதே சரசாவை, நீ சதா நேரமும் கொடுமைப் படுத்த வேண்டும். அவள் கண்கலங்கி நிற்பதைப் பார்த்து, 'கண்ணைப்போல் வளாத்தேன். இன்று கண்கலங்கி நிற்கிறாளே' என்று அவன் கதற வேண்டும். பர: மணி! இப்பொழுதுதானப்பா என் மனம் நிம்மதி அடைந்தது. மணி: 'பணம் பாழாகும் படலம்'--இதை ஆரம்பிக்க வேண்டும் இப்பொழுது. அதற்கு சரசா ஒரு கருவி. அவளை ஒரு தடவை முறைத்தால் ஓராயிரம்; ஒரு அடி அடித்தால் ஐயாயிரம்; 'ஐயோ' என்று அலறினால் பத்தாயிரம்-- இப்படிப் பறக்க வேண்டும் பணம்.

பர: பாவம், பெண்ணாயிற்றே! நாயமாகக் கேட்டால் வாங்கிக் கொடுத்துவிடுவாளே சரசா! மணி: இரக்கம் காட்டுகிறாயா? ஆனந்த்! அன்று உன் தந்தை மரக்கிளையில் தொங்கும்போது அவன் இரக்கம காட்டினானா? அந்த அரக்கனின் மகள் இவள். ஆதலால் ஒரே கல்லில் இரண்டு பழம் விழவேண்டும்; அதே சமயத்தில் பணமும் கறந்தாக வேண்டும். என்ன சொல்கிறாய்? பர: நான் தயார்! இப்பொழுதே ஆரம்பிக்கலாமா? மணி: கொஞ்சம் பொறு. இனிமேல்தான் முக்கியமான கட்டங்கள் இருக்கின்றன. அதனால்...

பர: அதனால்? மணி. இது இப்பொழுது தேவை...நீயே படித்துப் பார் பர : இடைவேளை. காட்சி- 27. இடம்: பாதை இருப்: மணி, பரமானந்தன் [மணியும் பரமானந்தனும் காரில் வருகின்றனர்.)