பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணி: எப்படி நம்ம ட்ரைவிங்? பர: ரொம்ப ஸ்டடி. மணி: ஆம்! இந்த ஸ்டடி வேணும் உனக்கு. இன்று, சகலவித அலங்காரத்துடன் வரவேற்கப் போகிறாள் சரசா. சொக்கிவிடக் கூடாது. நமது திட்டங்கள் எல்லாம் தவிடு பொடியாகிவிடும்.

பர: கவலைப்படாதே! இந்த உள்ளம் அனல் போன்றது. மணி. அவளுடைய கனி மொழிகளில் மயங்கி குளிர்ந்து விடாதே. பர: பயப்படாதே! பாதையினின்று தவறமாட்டேன். மணி: கலக்கம் ஏற்பட்டால் உன் தகப்பனார் மரக் கிளையில் தொங்கியதை நினை! காட்சி-28. இடம்: வேதாசலம் வீடு இருப்: அமிர்தம், சரசா அமிர்: இந்தாங்க அம்மா, பூ கேட்டிங்களே, கொண்டு வந்திருக்கிறேன். சர ஏண்டி! இதற்குத்தான் இவ்வளவு நேரமா? யாரோட வாயாடிக்கிட்டு இருந்தே? பெரிய இடத்துப் பீள்ளை; பாரீஸ், லண்டன் போனவரு,அவருக்கு இதுதான் பூவோ?

அமிர்: இதுதாம்மா.. நம்ம தோட்டத்திலே... இது தானுங்களே இருக்குது?

சர : சீ, கழுதை! வாயை மூடு! வரவர பேச்சு அதிக வாயில்ல வருது. இந்தா... இதைச் சாப்பிடு (தின்று மிச்ச ஆப்பிள் பழத்தை எறிகிறாள்; அமிர்தம் விழிக்கிறாள்)