பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏண்டி விழிக்கிறே! எச்சிலா இருக்கிறது என்று பார்க்கிறாயா? ஒன்றுமில்லேடி... நான் சாப்பிட்ட மிச்சம் அது. இந்தச் சமயத்தில் இதாவது கிடைத்தது என்று சந்தோஷப் படாமே... (மணியும், பரமானந்தனும் வரும் காரின் ஹார்ன் சத்தம் கேட்கிறது.) வே: வாங்க மாப்பிள்ளை செக்ரட்டரி சார்... நீங்க... மணி: பரவாயில்லை... பரவாயில்லை! சர: இதோ பார்த்தீங்களா! எங்க நாடகத்துக்காக வாங்கினது. பர: சகிக்கலை ஒன்றாவது. கர்மம்! சர: இதைப் பாருங்க! நாடகத்திலே எனக்குக் கிடைத்த பரிசுகள்... பர: பார்க்கச் சொல்லடி உங்க அப்பனை அமிர்: அம்மா, பழங்கள் கொண்டுவரச் சொன்னீங் களே... சர: ஏண்டி நிற்கிறே, சிலை மாதிரி! வைச்சுட்டுப்போ வெளியே. பர: சரசா! யார் இந்தப் பொண்ணு? சர: அவ நம்ம வீட்டு வேலைக்காரி. பர: ரொம்ப நல்லாயிருக்கிறது லட்டு

சர: அப்படியா! சந்தோஷம். பர : பெயரென்ன? சர: ரவா லட்டு. பர: அந்தப் பொண்ணோட பெயரு.. சர: குப்பி. (அலட்சியமாக) (அப்பொழுது உள்ளே இருந்து ஒரு குரல்: அமிர்தம்..)