பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேலைக்காரி பர : என்னடி இங்கே சளசளன்னு சத்தம்? சர: ஒன்றுமில்லே...பாட்டு பாடறேன். 63 பர: பாட்டு பாடறாளாம் பாட்டு. இவ பாட்டை நான் கேட்கணுமாம்! சர: உங்களை ஒன்றும் கேட்கச் சொல்லவில்லையே! பர: பின்னே... யாருக்காகடி நீ பாடறே? சர : சிவ, சிவா! பர: அதென்னடி அத்தனை அவசரமா சிவனை அழைக் கிறே. 'சிவ, சிவ' என்று அகோர தவம் செய்தாலும், அவன் வர்றது கஷ்டம் என்று சொல்லுவாங்க. நீ என்னடான்னா.. டெலிபோன பண்ற கைலாசத்துக்கு, சனியனே... சர: ஆமா... இப்போ நான் சனியனாகிவிட்டேன். அப் போது அப்சரசா இருந்தேன்... பர: அப்போது கழுதை கூடத்தாண்டி அழகாயிருக்கும், குட்டியாயிருக்கும்போது. சர: பூங்கொடியே என்று புகழ்ந்தீர்கள் ஒருமுறை.. பர: புது மோகத்தில்... சர: கொஞ்சினீர்கள், என்னிடத்தில் பர: உன் அழகைக் கண்டல்ல; உன் அந்தஸ்தைக் கண்டு. சர: சத்தியங்கள் செய்தீரே! பர: சரச நேரங்களில் சர: ஒருதரம் உயிரே என்றீர்கள்... பர: ஆம்; உயிரே, கண்ணே, கண்மணியே, கட்டிக் கரும்பே, கற்பகமே, கனிரசமே என்றுக்கூடத்தான் சொன் னேன். சிருங்கார சாஸ்திரத்தில் நான் கற்ற பாடங்களடி அவைகள். சர: அப்படி நான் செய்த குற்றம்தான் என்ன?