பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேலைக்காரி 65 காட்சி-32. இடம்: தோட்டம் இருப்: மூர்த்தி, அமிர்தம், பரமானந்தன். சரசா... மூர்த்தி: அமிர்தம்! நான் உனக்கு; நீ எனக்கு. இதை நிச்சயிக்க வேண்டும் இப்போது. வேலைக் அமிர்: வேளாளர் வீட்டுப் பிள்ளைக்கும் காரிக்கும் கல்யாணம் நடக்க முடியுமா? பெற்றோர்கள் சம் மதிப்பார்களா? மூர்த்தி: உன் அன்பைப் பெறாவிட்டால்... அமிர்: நீங்கள் என்னைக் கல்யாணம் செய்து கொள்ள விரும்புவது, வெள்ளாடு ஓநாயை விரும்புவது போலத்தான். பாலும் பழமும், தேனும் தினைமாவும் என்பதுபோல் ராஜா போன்ற உங்களுக்கு ராணிபோல் அல்லவா ஒருத்தி மனைவி யாக வேண்டும்? மூர்த்தி: அமிர்தம்! உன்னை அடையவில்லை என் றால் என் ஆவி நிலைத்திருக்காதடி கண்ணே! அமிர். எனக்கு மட்டும் உங்க மேலே ஆசையில்லேன்னா சொன்னேன்? உங்க துணிகளைத் துவைக்கும்போது ஒரு ஆனந்தம்; உங்களுக்காக கடைக்குச் செல்லும்போது ஒரு சந்தோஷம். உங்களைக் கூப்பிடச் சொன்னால் கூத்தாடு வேன். உங்களுக்காக நான் எவ்வளவு வேலை செய்தாலும், அலுப்பே தோன்றாது. ஆனால் நீங்க என்னைக் கல்யாணம் செய்து கொள்வது இந்தப் பூமி ஏற்குமா? பெற்றோர்கள் சம்மதிப்பார்களா? மூர்த்தி: இதெல்லாம் என்ன பேச்சு அமிர்தம்? அமிர்: எனக்கு இஷ்டம் இல்லேன்னா சொன்னேன்? பூ-154-வே-3