பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

66 வேலைக்காரி மூர்த்தி: பூமி ஏற்றால், பெற்றோர்கள் சம்மதித்தால், மாளிகையில் வாழலாம் அல்லது எங்கேயாவது மண் குடி சையில் வாழலாம். அமீர்: இனி ஒன்றும் சொல்லப் போவதில்லை.ஏதா வது தடைகள் ஏற்பட்டால், உங்கள் பாடு; அவர்கள் பாடு. இனி, நான் உங்கள் அடிமை. மூர்த்தி: சரி, நான் வருகிறேன் அமிர்தம். (மூர்த்தி போகிறான். பரமானந்தன் தின் தோளைப் பிடிக்கிறான்.] பர: கண்ணே அமிர்தம்! அமிர்: ஐயா! இதென்ன அக்கிரமம்? அமிர்தத் பர: அக்கிரமம் இல்லையடி கண்ணே ... இது ஆசை யின் விளைவு? அமிர்: என்னிடம்.. கேவலம்... நானொரு வேலைக்காரி பர: வேலைக்காரியா நீ? பூ விற்றால் பூக்காரி, பிச்சை எடுத்தால் பிச்சைக்காரி; சிங்காரித்துக் கொண்டால் சிங் காரி. நீ வேலை செய்கிறாய். அதனால் வேலைக்காரி. அமிர்: என்னையா இது! பைத்தியக்காரப் பேச்சு... பர: அமிர்தம்! இந்தப் பைத்தியம் தேவர் மூவர்களுக் கும் இருந்ததாம். நான் எம்மாத்திரம்?... அமிர்தம்... அமிர்: போதுமையா பேச்சு! இந்த வீட்டில் வேலை செய்ய வந்தேன். விபச்சாரத்துக்கு வரவில்லை. பர அட, பைத்தியமே! உன்னை இப்பொழுது விபச் சாரத்துக்கு யார் அழைத்தார்கள்? என் தர்ம பத்தினியாக வல்லவா இருக்கச் சொல்கிறேன்... அமிர்: அமாவாசையில் நிலவேது? காமவெறி பிடித்த வனுக்குத் தர்மம் ஏது?