பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேலைக்காரி 67 பர: என்றெல்லாம் எவனோ எழுதி வைத்திருந்த கதையில் படித்திருப்பாய்.. அமிர்: ஐயா, அதிகம் பேச வேண்டாம்... (சரசா வருகிறாள்.) சர: வீட்டு எஜமானனோடு உனக்கென்னடி பேச்சு? பர: அதை நீ யார் கேட்கிறது? அமிர்தம், என்னசெய்ய லாம்? கிரகச்சாரம்! நான் போய் வரட்டுமா? சர: இங்கே என்னடி நடந்தது? சொல்லு... அமிர்: ஏம்மா என் வயிற்றெரிச்சலைக் கிளப்புகிறீங்க! அந்தப் பாவி, என் மானத்தை வாங்கப் பார்த்தான்; நீங்க என் பிராணனை வாங்கறீங்க. சர: எந்தப் பாவிடீ, என்னடி செய்தான்? லேண்டி? அமிர் சொல் உங்க புருஷன்தான். இங்கே வந்தார். ஏழை தானே, எது வேண்டுமானாலும் செய்யலாம், கேட்கறதுக்கு யார் இருக்கா, அப்படி என்கிற தைரியம் சர: அடிப்பாவி...! அப்படியா? அமிர்: அவர் செய்த அக்கிரமங்களுக்கு, பாவிப் பட்டம் எனக்கா? சர: மூடுடி வாயை. தடியாட்டமா.. இருந்துக்கிட்டு தளுக்கும், மினுக்கும் செய்தா...ஆம்பளைக்கும் கெட்ட எண்ணம் வராதாடி? சனியனே! இந்த வீடு உருப்பட ணும்னா...நீ தொலையனும் மொதல்லே. போடி, போய்... வேலையைப் பாரு... போ! பர : சரசா! ஒரு மரக்கட்டை அவள். மனச்சாந்தி யைக் கலைப்பதற்காக அமிர்தத்துடன் ஒரு மாதிரியாக நடந்துகொண்டேன். வேதனைப்பட்டதில் வெறிபிடித்து விட்டது அவளுக்கு. நல்ல பிள்ளைகள் வேதாசலத்திற்கு. மகள் ஒரு அகம்பாவி; மகன் ஒரு அப்பாவி.