பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

68 வேலைக்காரி காட்சி-33. இடம்: நந்தவனம் இருப்: மூர்த்தி, பரமானந்தன், மணி பர: மூர்த்தி! உனக்கு ஏன் திடீரென்று என் மீது இவ்வ ளவு ஆசை. என்றுமில்லாதபடி என்னையும் அழைத்தாய் உலவ. ஆனால் பேசாமல் இருக்கிறாயே? மூர்த்தி: பரமு! பெண்களிடம் இளித்துக் கிடப்பவனே, பெருமை பேசுபவனே, மிரட்டுபவனே! நான் உன்னை ஒரு பேயனென்று மதிக்கின்றேன். டர: குடியன், வெறியன், தடியன், பித்தன், பேடி, காமுகன், கபோதி என்று பல பதங்களுண்டு, அகராதியிலே. ஓய்வு நேரத்தில் பார்த்து வைக்கவும். மூர்த்தி: நேரடியாகவே கேட்கிறேன். அமிர்தத்தை நீ என்னவென்று நினைக்கிறாய்? பர: என்னடா இது, வேடிக்கையான கேள்வி! அவ ளைப் பற்றி என்ன நினைப்பது? அவள் ஒரு வேலைக்காரி.. மூர்த்தி: வேலைக்காரியாயிருப்பதால் என்ன வேண்டு மானாலும் செய்யலாமென்பது உன் எண்ணமா? பர: மூர்த்தி! அமிர்தம் ஒரு வேலைக்காரிதான்.ஆனால் அற்புதமான ஜாலக்காரி, சிரித்து சித்திரவதை செய்யும் சொகுசுக்காரி; வெறும் அலங்காரி மட்டுமல்ல, பலே கைக் காரி! மூர்த்தி: பரமு! கேலி செய்ய வேண்டாம். கேள், இதை. அவள் உன்னை ஒரு துரும்பென மதிக்கிறாள். பர: சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்று நீ அவளுக்குச் சொல்வதுதானே...? மூர்த்தி: அமிர்தம் உண்மையில் உத்தமி.