பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேலைக்காரி 69 பர: மூர்த்தி! நீ சுத்தப் பைத்தியக்காரனாக இருக்கி றாயே. வீட்டு வேலைக்காரிகள் மூன்று விதம். சிலது தானா கவே மேலே வந்து விழும். சிலது தொட்டால் துவண்டுவிடும்; சிலதுகள் பத்தினி வேஷம் போடும் கொஞ்ச நாளைக்கு! இதில் உன் அமிர்தம் மூன்றாவது ரகம்' மூர்த்தி: உனக்குக் கிடைக்கமாட்டாள் அவள், 'கிட்டா தாயின் வெட்டன மற!' என்ற பழமொழி தெரியுமா உனக்கு? பர: 'அடிமேல் அடி. அடித்தால் அம்மியும் நகரும், என்று மற்றொரு பழமொழி இருக்கின்றதே, அது தெரி யுமா உனக்கு? மூர்த்தி: இனி அந்தப் பழமொழிப்படிதான் நடக்க உத்தேசம். பர: கொஞ்சம் விளக்கமாகச் சொல்லப்பா? மூர்த்தி: நீ அமிர்தத்திடம் வாலாட்டினால் இனி இக் சுரங்கள் சும்மா இருக்கப் போவதில்லை. வீட்டில் வளர்க் கும் நாய்,தானாகவே மேலே வந்து விழுந்தால் தடியால் அடிக்கத் தயங்கமாட்டார்கள். பற: சீ, நாயே... மூர்த்தி: யாரட நாய்? (இருவரும் சண்டை போடுகின்றனர். மூர்த்தி பரமானந்தனை உருட்டிவிட்டுப் போய் விடுகி றான்.] பர: உருட்டித் தள்ளி விட்டானப்பா... மணி: மீசையில் மண் ஒட்டவில்லையே! பர: திருப்பி அடிக்க முடியாதென்று நினைத்திருப்பான் உழைத்து உழைத்து மெருகேறிய கரங்கள் அவனைப் பொடிப் பொடியாக்கியிருக்கக் கூடும். ஆனால் சூட்சமம் கிடைத்திருக் கும்போது ஏன் கைவலிக்க அடிக்க வேண்டும்? மணி: அது என்னப்பா சூட்சமம்?