பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

70 வேலைக்காரி பர: மூர்த்தி அமிர்தத்திடம் காதல் கொண்டிருக்கும் விஷயம் தெரிந்துவிட்டது. இனி மூர்த்திக்கு வெறி கிளப்பி, அந்தக் கிழவனையும் தூண்டிவிட வேண்டும். மரத்திலிருந்து ஒரு கிளை ஒடியும். மகன் தந்தைக்கு விரோதியாவான். மணி: அவ்வளவு தூரம் புத்திசாலியாயிட்டியா? பரம சந்தோஷம். காட்சி--34 இடம்: வேதாசலம் இல்லம் இருப்: வேதாசலம், மூர்த்தி, அமிர்தம், பரமானந்தன். [சிலர் பரமானந்தனுடைய நடத்தையைப் பற்றி வேதாசலத்தினிடம் குறை சொல்லிக் கொண் டிருக்கின்றனர். அப்போது பரமானந்தன் அங்கு வருகிறான்.] ஒருவர்: என்னங்க! உங்க மருமகப்பிள்ளை போடற ஆட்டம் சகிக்கத்தான் முடியவில்லை. அவரைப் பற்றி ஊர் பூரா... பேசிக்கிறத கேட்டா... வே: நாக்கைப் பிடுங்கிக்கினு சாகலாம்னு தோணும்... இன்னொருவர்; இதை உங்க காதிலே போட்டு வைச் சிட்டுப் போகலாம்னுதான் வந்தோம். மற்றொருவர்: பயப்படாதீங்க... உங்களைக் காளி யாத்தா...கைவிடமாட்டா. நாங்க வாரோம். வே: சொக்கா! நல்ல மருமகன் வந்து சேர்ந்தான். பணமும் போகுது; மானமும் போகுது; நாம் வாழ்ந்த வாழ்வும் போகுது. பர: சொக்கா! மாமாவுக்கு இப்படியெல்லாம் மனசு புண்ணாகும்படி பேசக்கூடாதுன்னு சொல்லி வைப்பா. சொல்லி வை...