பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேலைக்காரி 71 வே: என்ன, என்ன? உன் மனசா புண்ணாகுது? குடி யன், வெறியன். சூதாடி, கூத்திக்கள்ளன் அப்படி-- இப் படின்னு ஊரார் பேசிக்கிறதைக் கேட்டு என் மனசில்லப்பா புண்ணாகுது? பர': என்ன மாமா சொல்றீங்க? வே: பணத்தைப் பாழாக்கு! பர: உம்... வே: குடிச்சி,கூத்தாடி... பர: உம்...உம்! வே: கண்ட காவாலி பசங்களோடக் கூடி பர : உம்...உம்.. உம்...! வே: என் மானத்தை வாங்கற. உன்னைப் பார்த்து ஊரு சிரிப்பா சிரிக்குது பர: ஏன் மாமா! ஊர் என்னைப் பார்த்துச் சிரிக்குதா? அல்லது உங்க மகனைப் பார்த்துச் சிரிக்குதா? வே: அதென்னடா.. புதுசா... அவனை இழுத்து நடுவ போடற? அப்பாவியாச்சே அவன்! நீ இருக்கிற நிழலில்கூட நிற்கமாட்டானே அவன். பர: நிக்கறதுக்கு யோக்கியதை வேணுமே மாமா... வே: ஏன்? பர: அது இருந்தா...ஜாதி-குலம் பாக்காமே ஒரு வேலைக்காரப் பொண்ணைக் கையைப் பிடிச்சி இழுப்பானா? வே: என்ன, என் மகன் வேலைக்காரி பொண்ணை கைப்பிடிச்சு இழுத்தானா? ஏம்பா அவன் மேலே அபாண் டமா சொல்றே? அந்த போக ஜோலிக்கெல்லாம் மாட்டானே அவன்... பர: ஏன் மாமா! நேர்லே காமிச்சா... நம்புவீங்கல்ல... காண்பிக்கிறேன். அந்தக் காட்சியை ஒரு நாளைக்கு!