பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

72 142 வேலைக்காரி காட்சி 35. இடம்: நந்தவனம் இருப் வேதாசலம், மூர்த்தி, அமிர்தம், பரமானந்தன். (அமிர்தம் - மூர்த்தி நந்தவனத்தில் காதல் கீதம் பாடிக்கொண்டிருக்கிறார்கள்.] அமிர்: நம் காதல் வெறும் விளையாட்டாகி விடும் என்று எனக்கு எப்போதும் ஒரு பயம். மூர்த்தி: இதெல்லாம் வீண் பயம் அமிர்தம்! உன்னை இழக்க நான் எனன அவ்வளவு முட்டாளா? அமிர்தம், அப் பாவிடம் சொல்லி கூடிய சீக்கிரமே கல்யாணத்துக்கு ஏற் பாடு செய்கிறேன். அப்புறம் பாரேன்... நம்முடைய மாளி கையில் வசந்த மண்டபம் ஒன்று கட்டி, ஜலக்கிரீடைகளுக்கு ஒரு தடாகம் கட்டி, அதைச் சுற்றிலும் வெற்றி வேராலே வேலி போட்டு, அதைச் சுற்றிலும் மல்லிகை மலர்களால் அலங்கரித்து, அந்த மணம் கம்மென்று வீச, உன்னை என் மடிமேல் சாய வைத்து, இல்லை, இல்லை... உன் மடிமேலே நான் சாய்ந்து கொண்டு {வேதாசலமும் பரமானந்தனும் வருகிறார்கள்.] வே: பாடுவாடா பாடுவா! டேய், மூர்த்தி! நீ பாட்டு தானா பாடுவ... பர: மாமா! பாட்டு எங்கே? அதைக் கவனிச்சிங்களா? வசந்த மண்டபத்திலே... வே: ஹூம்! வசந்த மண்டபந்தானா இருக்கும், இவரு கட்ற மாளிகையிலே... பர:. அங்கே ஜலக் கிரீடைக்கு ஒரு தடாகம்கூட இருக்கும்.