பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேலைக்காரி 73 வே: இருக்கும், இருக்கும்!! இந்தாடீ, அமிர்தம்! என்ன துணிச்சலடி உனக்கு? போய், வரச் சொல்வடி ஓங் கப்பனை! அவன் கிட்டே பேசுகிறேன் நான். டேய், மூர்த்தி! வேலைக்கு ஆள் வச்சா அவ சேலையையாடா பிடிச்சு இழுக் கிறது? பர: அட; சேலையைப் பிடிச்சு இழுத்தாக்கூட, என்னமோ விளையாட்டுத்தனமா செஞ்சிட்டான்னு விட்டுட லாமே மாமா! அவளுக்கு மாலையில்லே போடப்போறாராம் மாலை? வே: போடுவாரு, போடுவாரு! ஏன் போடமாட்டாரு போடா போக்கத்தவனே! நடடா வீட்டுக்கு! மடையா... வேதாசலம் வீட்டில்] மூர்த்தி: நான் எதையும் மறைக்கவில்லையே அப்பா! காமசேஷ்டை இல்லையே, நீங்க கண்டது? பர : இல்லை... சகுந்தலை-- துஷ்யந்தன் நாடகம்- வேதாசல முதலியார் தலைமையிலே! ஏம்பா, அப்படித் தானே? மூர்த்தி! நீ இவ்வளவு சீக்கிரம் கெட்டுடுவேன்னு நான் நினைக்கவே யில்லை. நம்ப ஜாதி. குலம்... ஆசாரம்... மூர்த்தி: ஜாதி-குலத்திலே எனக்கு நம்பிக்கை இல்லை. பர: உனக்கில்லை... எனக்கிருக்கிறது; எங்க மாமாவுக் கிருக்கிறது..ஏன் மாமா? வே: ஆமாம் மாப்பிள்ளை! டேய், அந்தப் பொண்ணை டச்சி கிச்சி பண்ணியிருந்தா சொல்லுடா. இப்பவே காசு பணம் கொடுத்துக் கழுதைங்களை ஊரைவிட்டு ஓட்டிவிட லாம். மூர்த்தி: பணத்தை 'பாபக்கடை' என்று எண்ணுபவள் அமிர்தம். வே: அட, நிறுத்தடா! ஒரே வார்த்தை சொல்றேன். ஜாதி ஆசாரத்தைக் கெடுக்காதே.