பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

74 வேலைக்காரி மூர்த்தி: நான் அமிர்தத்துக்குத் துரோகம் செய்ய முடி யாதப்பா.இதோ. நான் போகிறேன். அமிர்தத்தோடு கூலி வேலை செய்தாவது பிழைப்பேன். உங்கள் குலப்பெருமை குன்றாமலிருக்கட்டும் வே: டேய், மூர்த்தி! உன் மனசு என்ன இரும்பா? பர: ஹூம்! இரும்புமில்லை, பித்தளையுமில்லை... சும்மா பையன் மிரட்டுகிறான்! வீட்டை விட்டு வெளியே போனா... காரியம் பலிக்கும்ங்கற தந்திரம். வே: அதுதான் நடக்காது மாப்பிள்ளை. அதுதான் இவரு கிட்டே நடக்காதுன்றேன். பர: ஏம்பா, மூர்த்தி! நீ போயிட்டா... என்னாப்பா! போயிட்டான் பிள்ளைனனு மாமா தலை முழுகிட்டுப் போறாரு! இது என்ன பிரமாதம்! ஏன் மாமா? வே: பின்னே என்ன மாப்பிள்ளை! டேய், ஒரே வார்த்தை! அமிர்தம் என்ற பேரை மறந்திட்றியா? அல்லது வீட்டைவிட்டு வெளியே போயிடறியா? என்ன சொல்றே? மூர்த்தி: அப்பா, நான் வெளியே போயிட்டா...உங் களுக்குத்தானே தலையிறக்கம்? வே: நீ என் பிள்ளேன்னும் நெனைச்சாதானேடா தலையிறக்கம்? பர: அப்படிச் சொல்லுங்க மாமா.. மூர்த்தி: அப்பா! அமிர்தத்திற்கு நான் எந்த விதத்தி லும் துரோகம் செய்யமாட்டேன். வே: அப்படியா... இன்னையிலிருந்து நீ என் மகனல்ல; நட்டா வெளியே... பர: ஆமா ...வேதாசல முதலியார் மூர்த்தியோட அப் பனுமில்லே... மூர்த்தி: அப்பா! இதோ நான் போகிறேன். {மூர்த்தி வீட்டைவிட்டு வெளியேறுகிறான்.) பர : ஆரம்பித்துவிட்டது சுந்தர காண்டம்.