பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேலைக்காரி 75 வே: நீ வேற. வெந்த புண்ணிலே வேல் கொண்டு குத்து. பர: வெந்த புண்ணிலே வேல்; மரக்கிளையிலே பிணம். காட்சி-36. இடம்: அமிர்தத்தின் வீடு இருப்: மூர்த்தி, அமிர்தம் [மூர்த்தி, நேராக அமிர்தத்தின் வீட்டுக்கு வருகி றான்.) மூர்த்தி: அமிர்தம்! அமிர்: ஆ, நீங்களா...? மூர்த்தி: ஏன் அமிர்தம், ஒரு மாதிரியா... இருக்கிறே? அமிர்: வீட்டிலே என்னமோ பேசினாங்க...பயம் இன் னும் அடங்கலீங்க... மூர்த்தி: வா, போகலாம் அமிர்தம்! ஒரு நல்ல சேதி. நம்ப சுல்யாணத்திற்கு அப்பாவின் சம்மதமே இல்லாமல் போய்விட்டது. அமிர்: அப்படீன்னா... மூர்த்தி: அவருக்கு மகனைவிட ஜாதிதான் உயர்வாக இருக்கிறது. 'நீ என் பிள்ளை இல்லை; வீட்டை விட்டுப் போடா. வெளியே' என்று துரத்திவிட்டார், கண்ணே! அமிர்: அய்யய்யோ! மூர்த்தி: ஜாதி பேத அடிமையிலிருந்து விடுதலை பெற்றுவிட்டேன். இனி நாம் சந்தோஷமாக வாழலாம். அமீர்: என் பொருட்டு தாங்கள் சொத்து- சுகங்களை இழப்பதா?