பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

76 வேலைக்காரி மூர்த்தி: சுகத்தை இழந்ததாக எந்த முட்டாள் சொன் னான்? அமிர்தம்! சுகம் எங்கிருக்கிறது என்று தேடித் தானே இங்கு வந்து சேர்ந்தேன்... அமிர்: இங்கிருப்பது மண்குடிசை! மூர்த்தி ஆம்; அதுவே நமக்கு மாளிகை அமிர்தம்! மண்ணிலே மாணிக்கம் கண்ணே! பெற்றோர் சமமதித்தால் மாடமாளிகையில் வாழலாம்; இல்லையேல் இந்த மண் குடி. சையே மாளிகை. அமிர்தம்! அழாதே. உலகத்தைப் பார்த் துச் சிரிக்க வேண்டிய நேரத்தில் ஏழ்மையை நினைத்து ஏன் அழுகிறாய்? குயிலே! இனி என் உழைப்பே செல்வம்; உன் முகமே இன்ப ஒளி காட்சி-37. இடம்: வேதாசல முதலியார் வீடு இருப். வேதாசல முதலியார், முருகேசன். வே: கோவம் வருதே பிரமாதமாய் இந்தக் கோவத்தை உன் வீட்டிலே காட்டி, உன் பொண்ணெ அடக்க ஒடுக்கமா...வச்சிருந்தா இந்தத் தீம்பு வரும! என் தலைக்கு! ஒரே பொண்ணுன்னு செல்லங் கொடுத்தே. நானும் ஒரே மகன்னு பார்த்தேன். இப்போ, மானம் போருது... முரு: ஏங்க, என மகளா தப்பு தண்டா செஞ்சிது? பத்தரை மாத்து தங்கமாச்சிங்களே அது! ஏங்க, ஏழை மேலே அபாண்டமா பழி சொல்றீங்க? விலையாகிற பண் டங்க அது. வே: நல்ல விலைக்கு வித்துப் பூட்டேன்னுதான் நானும் சொல்றேன். அந்த தடிக்கழுதை மூர்த்தி, 'வீடு வேணாம், வாசலும் வேணாம், அந்தப் பொண்ணுதான் வேணும்'னு போயிட்டான். அவ்வளவு தூரம் ஏறிப் போயிடுச்சி, உன் மக போட்ட சொக்குப் பொடி முரு: என்னாங்க சின்ன எசமானா? உங்க மகனா?