பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேலைக்காரி 77 வே: எனக்கு ஏண்டா அவன் மகனாகிறான்? உன் மரு மகன்டா அவன் முரு: நல்லாயிருக்குங்க சேதி! என்ன தைரியங்க, சின்ன எசமானுக்கு? வே: அவன் கிடக்கிறாண்டா மடையன். உன் மகளுக் கெங்கடா அறிவு போச்சு? உன் மக சம்மதிச்சாளாமே. அதுக்குச் சொல்லு! எங்கிருந்து வந்தது அந்த நெஞ்சழுத் தம்? எங்க வீட்டுச் சோறுடா, எங்க வீட்டுச் சோறு! தின்னு கொழுத்துப் போயி.... என் மகனை வேற கையைப் பிடிச்சு இழுக்க வந்துட்டா... முரு: எசமான்! வார்த்தையை அளந்து பேசுங்க... நாங்க தலைமுறை தலைமுறையா மானத்தோடு வாழ்ந் தெரிஞ்சிக்கங்க...இப்பவே போறேன். தவங்க. வெட்டா வெட்டிப் போட்டுட்டு வர்றேன். வே: யாரைடா? ஒரே முரு: என் குலத்தைக் கெடுக்க வந்த குட்டிச் சாத் தானை காட்சி38. இடம்: நந்தவனம் இருப்: அமிர்தம், மூர்த்தி அமிர்: குடும்பத்தைக் கெடுத்தவளென்று சொல்லுவாங் களே... மூர்த்தி: உண்மையைக் கூறமுடியாத ஊமைகள்! அமிர்: தந்தைக்கும் தனயனுக்கும் சண்டை மூட்டினவ ளென்று தூற்றுவார்களே.. மூர்த்தி: இதயஜோதியைக் காணாத குருடர்கள்! அமிர்: தகப்பனையும் மகனையும் வேறுபடுத்தினவள் என்று ஏசுவார்களே... மூர்த்தி: காதல் கீதம் கேட்டறியாத செவிடர்கள்.